மீண்டும் வில்லனாக அரவிந்த்சாமி!

மீண்டும் வில்லனாக அரவிந்த்சாமி!
Updated on

அழகான அரவிந்த்சாமி மீண்டும் வில்லனாக நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்கும் படம் கஸ்டடி.

இந்த படத்தில் அரவிந்த்சாமி சிறிய இடைவெளிக்கு பின்பு வில்லனாக ஆட்டத்தை ஆரம்பிக் கிறார். நாகசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

கீர்த்தி இந்த படத்தில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து கஸ்டடி படத்திற்கு இசை அமைக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. நாகசைதன்யா நடித்த படங்களில் மிக அதிக பொருட்செலவில் எடுக்க பட்ட படம் இதுதான் என்கிறார்கள். இப்படத்திற்காக கீர்த்தியின் போஸ்டர் வித்தியாசமாக உள்ளது.

ஸ்ரீனிவாச சித்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார்.சாமியின் நடிப்பு, ராஜாக் களின் இசை, வெங்கட் பிரபுவின் இயக்கம் என வரும் கோடை தினங்கள் தியேட்டரில் இன்னமும் சூடு பிடிக்க போகிறது.

logo
Kalki Online
kalkionline.com