பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படத்தின் வில்லன் இவரா? அப்போ ஹீரோ யாரு?

Pa.Ranjith
Pa.Ranjith

பல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் தனது அடுத்தப் படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இதனையடுத்து இப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் பற்றிய செய்திகள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யக்கடலில் தள்ளியுள்ளது.

பா.ரஞ்சித் 2012ம் ஆண்டு அட்டக்கத்தி என்றப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தினேஷ் வைத்து இயக்கிய இப்படம், ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. அதன்பின்னர் இவர் கார்த்திக் நடிப்பில் மெட்ராஸ், ரஜினியின் கபாலி, காலா, ஆர்யா நடித்த சர்பாட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கினார்.

மெட்ராஸ் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், கபாலி மற்றும் காலா ஆகிய படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒரளவுதான் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது. ஆனால், சிலருக்கு இப்போதும் அந்தப் படங்கள் பிடித்த படங்களாகவே உள்ளன. அதன்பின்னர், ரஞ்சித் இயக்கிய அனைத்து படங்களையும் பின்னுக்குத் தள்ளி, சர்பாட்டா பரம்பரை அனைவரின் பேராதரவையும் அன்பையும் பெற்றது.

2022ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ சினிமா ரசிகர்களின் ஆதரவைப் பெற்றாலும், பொது ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. இதனையடுத்து இவர் விக்ரம் வைத்து தங்கலான் படத்தை இயக்கிவருகிறார். இப்படம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பையும் தாங்கி நிற்கிறது. ஆனால், பலமுறை வெளியீட்டு தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.

மேலும் பா.ரஞ்சித் இயக்குனராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் சினிமாவில் வலம் வருகிறார். பரியேறும் பெருமாள், ரைட்டர், பொம்மை நாயகி, ஜே பேபி போன்ற ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார்.

இதனையடுத்து தற்போது அவரின் அடுத்தப் படத்தைப் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
வடிவேலுவை சம்பளத்தில் முந்திய யோகி பாபு... ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?
Pa.Ranjith

அந்த திரைப்படத்தில் பா. ரஞ்சித்தின் அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் அட்டகத்தி தினேஷ் ஹீரோ கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார். மேலும் ஆர்யா அந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்யா இதற்கு முன்னர் அவரின் முதல் படமான அரிந்தும் அறியாமலும் படத்தில் டெரர் லுக்குடன் வில்லன் போல் சிறப்பாக நடித்திருப்பார்.   

பா.ரஞ்சித் இயக்கிய முதல் படத்தில் தினேஷ் நடித்திருப்பார். தற்போது மீண்டும் அந்தக் கூட்டணி இணையவுள்ளது. அதேபோல் சர்பாட்டா பரம்பரை கூட்டணியும் இணையவுள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் இந்த செய்தி, அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com