K.Rajan
K.Rajan

எடுத்தவுடனே எல்லோரும் எம்.ஜி.ஆர் மாதிரி முதலமைச்சர் ஆகனும்னு நினைக்கிறாங்க – கே.ராஜன்!

Published on

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளருமான கே.ராஜன் அரசியலில் நுழைந்தவுடன் முதலமைச்சர் ஆகனும்னு எல்லாரும் நினைக்கிறாங்க என்று பேசியிருக்கிறார்.

கே.ராஜன் 1983ம் ஆண்டு பிரம்மச்சாரிகள் என்ற படத்தை தயாரித்து சினிமா துறையில் அறிமுகமானார். அதன்பின்னர் 1987ம் ஆண்டு மைக்கேல் ராஜா என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் 1991ம் ஆண்டு இயக்குனர் அவதாரம் எடுத்தார்.  மேலும் அதே ஆண்டு தங்கமான தங்கச்சி என்ற புத்தகத்தையும் எழுதி எழுத்தாளராகவும் வலம் வந்தவர்.

இவர் இளையராஜாவின் காப்புரிமை தொடர்பான சிக்கலில், இளையராஜா கருத்துக்கு எதிராக பேசியவர்களுள் இவரும் ஒருவர். அதேபோல், ஒரு தயாரிப்பாளராக இசையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, தயாரிப்பாளர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் பல மேடைகளில் பேசியிருக்கிறார்.

அந்தவகையில் சமீபத்தில் கே.ராஜன் பேசியது குறித்துப் பார்ப்போம். “எடுத்த உடனே எல்லாரும் எம்.ஜி.ஆர் மாதிரி முதல் அமைச்சர் ஆகணும்னு நினைக்கிறாங்க. படத்துக்கு 50 லட்சம் வாங்குனா அதுல 20 லட்சம் ஏழைகளுக்கு கொடு.. ஏழை உன்னோட படத்தை பாப்பான், உனக்கும் வசூல் ஏறும். இது எந்த ஹீரோவுக்கும் தெரியல, கொண்டுப்போய் அடுக்கி வெச்சிடுறான் ரூம்ல,… 300 கோடி சம்பளம் வாங்குறவன் எப்படி வளந்தாங்க… குடுத்தது குறைவு எடுத்தது அதிகம்.” என்று பேசினார்.

இதையும் படியுங்கள்:
பாக்ஸ் ஆபிஸில் திணறும் தமிழ் சினிமா!
K.Rajan

கே.ராஜனின் இந்த வார்த்தைகள் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. ஏனெனில், இது யாருக்காக சொல்கிறார் என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும். 300 கோடி பட்ஜெட்… வந்தவுடன் முதலமைச்சர், ரூம்ல அவ்ளோ காச பூட்டி வச்சுக்குறாங்க போன்ற வார்த்தைகள் மறைமுகமாக ஒருவரை குறிக்கிறது என்றே கூறலாம்.

நடிகர் மட்டும்தான் ஏழைகளுக்கு காசு கொடுக்கனுமா என்ன… தயாரிப்பாளர்கள் கொடுக்க வேணாம்போல…

அரசியலில் வந்தால், பலரின் வரவேற்புகளையும், சிலரின் எதிர்ப்புகளையும் கடந்துதானே வரனும்.

எது எப்டியோ… அரசியல இதலாம் சாதாரணமப்பா…

logo
Kalki Online
kalkionline.com