“இந்த நேரத்துல மூச்சு விடவே பயமா இருக்கு “ மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த்!

Rajinikanth
Rajinikanth

சென்னை வடபழனியில் உள்ள காவேரி கிளை மருத்துவமனைத் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட ரஜினிகாந்த் உரையாற்றியுள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள ஆற்காடு சாலையில் காவேரி கிளை மருத்துவமனைத் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது, “ பொதுவாக நான் கட்டட திறப்பு விழாக்களிலோ அல்லது கல்லூரி திறப்பு விழாக்களிலோ கலந்துக் கொண்டால், அந்தக் கல்லூரிக்கு நான் பாட்னர் என்றும் என்னுடைய பங்கு அதில் இருக்கிறது என்றும் வதந்திகள் பரவுகின்றன. இதனாலேயே நான் 25 வருடங்களாக எந்த விழாக்களிலும் கலந்துக்கொள்ளவில்லை.

அதேபோல் ஒரு விழாவில் அழைத்தார்கள் என்று சென்றால், அடுத்தடுத்து போகும்படியாக இருக்கும் என்பதாலும் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள மறுத்து வந்தேன். ஆனால் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால்தான் இங்கு வந்தேன். ஏனெனில் அப்போலோ மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, ராமச்சந்திர மருத்துவமனை, இசபெல் மருத்துவமனை, விஜயா மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளிலிருந்து சிங்கப்பூர், அமெரிக்கா மருத்துவமனைகள் வரை இந்த உடம்பு சென்று வந்திருக்கின்றது. இதனால் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் மேல் எனக்கு நல்ல மரியாதை உள்ளது. அவர்களின் உதவியாலும் முன்னணி தொழில்நுட்பத்தின் உதவியாலும் மட்டுமே நான் இன்னும் உயிர் வாழ்ந்து வருகிறேன்.

இந்த இடத்தைப் பார்க்கும்போது பல ஞாபகங்கள் வருகின்றன. இந்த இடத்தில்தான் இயக்குனர் விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தை எடுத்தார்கள். அந்தப் படம் நிறைய வசூலை ஈட்டியது. அதன்பின்னர் இது ஒரு ராசியான இடம் என்று அனைவரும் நினைத்தார்கள். அதேபோல் இந்த இடத்தில் பல படங்களின் ஷூட்டிங் நடந்தன.

அவையனைத்துமே நல்ல வரவேற்பைப்பெற்றன. அதேபோல் என்னுடைய படத்தின் சில சூட்டிங்கும் இந்த இடத்தில் நடந்தன. அப்படி ஒரு ராசியான இடத்தில்தான் இப்போது இந்த மருத்துவமனையைக் கட்டியுள்ளனர். இந்த மருத்துவமனை நன்றாக வளர்ந்து பலரை குணப்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
லோக்சபா தேர்தல் : திமுகவின் வாக்குறுதிகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள்!
Rajinikanth

முன்பெல்லாம் காவேரி மருத்துவமனை எங்கே இருக்கிறது என்று கேட்டால், கமலஹாசன் வீடு பக்கத்தில் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது கமலஹாசன் வீடு எங்கே என்று கேட்டால் காவேரி மருத்துவமனை அருகே உள்ளது என்று கூறுகிறார்கள். இதைக்கேட்டு கமலஹாசன் தவறாக நினைத்துவிடக்கூடாது. மீடியா நண்பர்களே, சும்மாதான் சொன்னேன். கமலஹாசனை கலாட்டா செய்கிறேன் என்று எழுதிவிடாதீர்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசவே வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் ஓரிரு மீடியாக்கள் மட்டும்தான் வருவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் இங்கு வந்துப் பார்த்தால் நிறைய பேர் உள்ளார்கள். தேர்தல் நேரம் என்பதால் மூச்சு விடக்கூட பயமாகவுள்ளது.” இவ்வாறு அவர் பேசி முடித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com