லோக்சபா தேர்தல் : திமுகவின் வாக்குறுதிகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள்!

MK Stalin
MK Stalin
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

இந்த ஆண்டிற்கான லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள் மற்றும் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் மற்றும் முதல்வருமான ஸ்டாலின் இந்தத் தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறிய நிலையில் தற்போது 11 புதுமுக வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

திமுக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. மேலும் கூட்டணியையும் உறுதி செய்துள்ளது. அந்தவகையில் திமுக சார்பில் எந்தெந்தத் தொகுதிகளில் யார்யார் போட்டியிடப் போகிறார்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

தூத்துக்குடி – கனிமொழி

வடசென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி ( முன்னாள் அமைச்சர் ஆர்காடு வீராசாமியின் மகன் )

தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் ( அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தங்கை )

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

ஸ்ரீபெரும்புத்தூர் – டி.ஆர்.பாலு

காஞ்சிபுரம்- ஜி.செல்வம்

அரக்கோணம் – எஸ். ஜெகத்ரட்சகன்

திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

வேலூர் – கதிர் ஆனந்த் ( அமைச்சர் துரைமுருகன் மகன்)

நீலகிரி – ஆ. ராசா

பொள்ளாச்சி – கே. ஈஸ்வரசாமி

தர்மபுரி – ஆ. மணி

ஆரணி – எம்எஸ். தரணி வேந்தன்

கள்ளக்குறிச்சி – ஏ. மலையரசன்

சேலம் – டிஎம். செல்வ கணபதி ( முன்னாள் அமைச்சர் )

ஈரோடு – பிரகாஷ்

கோவை – கணபதி ராஜ்குமார்

தஞ்சாவூர் – ச. முரசொலி

தென்காசி - ராணி ஸ்ரீ குமார்

பெரம்பலூர் – அருண் நேரு

தேனி – தங்க தமிழ்செல்வன்

இதில் 11 புதுமுகங்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் வாக்குறுதிகள்:

1. உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.

2.  மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படும்.

3. ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.

4.  மத்திய அரசுப் பணிகளுக்குத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.

5. புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.

6. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

7. மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.

8. அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.

9. தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழருக்கு, இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

10. ரயில்வே துறைக்குத் தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

11. புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.

12. நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

13. நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

14.இந்தியா முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய்.1000/ வழங்கப்படும்.

15. தமிழ்நாட்டிற்கு ' நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

16. மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.
17. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

18. பா.ஜ.க அரசின் தொழிலாளர் நல விரோதச் சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.

19. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

20. வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

21. குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.

22. மத்திய அரசு அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

23. ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

24. வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) செய்யப்படும்.

இதையும் படியுங்கள்:
லோக்சபா தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி!
MK Stalin

25. இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

26. விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.

27. LPG சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை -ரூ.75 மற்றும் டீசல் விலை ரூ.65-ஆக குறைக்கப்படும்.

28. பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.

29. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து150-ஆகவும், ஊதியத்தை ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.

30. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில் புதியதாக அமைக்கப்படும்.

31. பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோதச் சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.

32. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.

33 .மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.

34. ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

35. இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்தச் சச்சார் கமிட்டிப் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.

36. சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்.

என மொத்தம் 36 வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com