திரைத்துறையில் அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி!

Akash murali
Akash murali

மறைந்த தமிழ் நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

80, 90 கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் சகோதரர், ஹீரோ, காதல் மன்னன் என அனைத்துக் கதாபாத்திரங்களிலும் நடித்து பட்டையை கிளப்பிய மறைந்த மூத்த நடிகர் முரளி. இவர் தனது எதார்த்தமான நடிப்பின்மூலம் மக்களைக் கவர்ந்தவர்.

இவர் தனது மூத்த மகன் அதர்வாவின் முதல் படமான பானா காத்தாடியில் கேமியோ ரோல் செய்தார். இதுதான் அவரின் கடைசி படமும் கூட. அதன்பின்னர் சிறிதுகாலங்களில் மண்ணுலகைத் துறந்தார்.

இவர் மறைவுக்குப் பின்னர், அதர்வாவின் படங்கள் வரிசையாக ஹிட் கொடுத்தன. பின்னர், அவர் ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களே நடித்தார். அந்தப் படங்களும் அவ்வளவாக க்ளிக்காவில்லை.

சமீபத்தில் முரளியின் தம்பியும், அதர்வாவின் சித்தப்பாவுமான டேனியல் பாலாஜி காலமானார். இதனையடுத்து தற்போது முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் ஒரு படத்தில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ், நேசிப்பாயா எனும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை அறிந்தும் அறியாமலும், பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கியுள்ளார். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்
நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
கென்யா நாடாளுமன்றத்தில் தீ வைத்த மக்கள்… தொடரும் பதற்றம்!
Akash murali

இந்த படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் விஷ்ணுவரதன் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து நேசிப்பாயா படத்தின் புதிய போஸ்டர் ஒன்று படக்குழுவினர் சார்பில் வெளியிடப்பட்டது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஜூன் 28) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com