விமர்சனம்: அதிரடி (2026) - மலையாளம் - காமெடி டிராமா!

Athiradi
Athiradi
Updated on
ரேட்டிங்(2.5 / 5)

15/5/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான அதிரடி (Athiradi) படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப்பெற்று இருக்கிறது. பசீல் ஜோசப் எடுத்திருக்கும் சொந்தப்படம் இது. பசீல் ஜோசப் நாயகன் ஆகவும் டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்திருக்கும் காமெடிப்படம் இது. ஆங்கில சப் டைட்டில் உண்டு.

மன்சூர் அலிகான் நடித்து 2015ல் வெளியான அதிரடி என்ற தமிழ்ப்படத்துக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மின்னல் முரளி என்ற மெகா ஹிட் படத்தின் திரைக்கதை ஆசிரியர் ஆன அருண் அனிரூதன் அறிமுக இயக்குநராக களம் இறங்கி இருக்கும் படம் இது.

ஸ்பாய்லர் அலெர்ட்

மெயின் கதைக்குப் போகும் முன் ஒரு பிளாஸ்பேக்.

நாயகனின் அண்ணன் ஒரு கல்லூரி மாணவன். அவனுக்கு ஒரு காதலி. இருவரும் காதலிக்கிறார்கள். அந்தக் காலேஜில் வருடா வருடம் ஆரோஹன் என்னும் கலை நிகழ்ச்சி ஆண்டு விழா போல நடைபெறும். அந்த விழாவில் நாயகனின் அண்ணனும், அவனது காதலியும் இணைந்து எழுதிய ஒரு புத்தகத்தை வெளியிட இருக்கிறார்கள்.

விழா நடக்கும்போது ஒரு கலவரம் ஏற்படுகிறது. அந்த கலவரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசலில் சிக்கி நாயகனின் அண்ணனின் காதலி இறந்து விடுகிறாள். நாயகனின் அண்ணன் தன் காதலியின் நினைவாக சோகமாக இருக்கிறான். கலவரம் மற்றும் மரணம் காரணமாக காலேஜில் அந்த ஆரோஹன் என்னும் விழா இப்போது நடப்பதில்லை.

இனி மெயின் கதை. நான்கு வருடங்கள் கழித்து...

நாயகன் அண்ணன் படித்த அதே காலேஜில் மாணவன் ஆக சேர்கிறான். நாயகியும் அதே காலேஜில் முதலாம் ஆண்டு மாணவி. நாயகியைப் பார்த்ததுமே பிடித்துப் போனதில் நாயகன் நாயகியைக் காதலிக்கிறான். நாயகி இன்னமும் பிடி கொடுக்கவில்லை.

ஆரோஹன் விழாவை மீண்டும் நடத்த நாயகன் முயற்சிகள் எடுக்கிறான். அந்த விழா நடத்தும் பொறுப்பில் நாயகன், நாயகி இருவரும் அமர்த்தப்படுகிறார்கள். ஒரு விஐபியை சீப் கெஸ்ட் ஆக வர வைக்க நாயகன் முயற்சிகள் எடுக்கிறான்.

வில்லன் ஒரு அரை குறை பாடகன். முன்னாள் ரவுடி. மாணிக் பாட்சா வாக வாழ்ந்த வாழ்க்கை போதும் என திருந்தி மாணிக்கம் ஆக வாழ்பவன்.

காலேஜில் நடக்கும் ஆரோஹன் விழாவில் பாடி விட்டால் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என வில்லன் நினைக்கிறான். ஆனால் ஒரு கட்டத்தில் நாயகன், வில்லன் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இதற்குப்பின் திட்டமிட்டபடி அந்த விழா நடந்ததா? இல்லையா? என்பது மீதித் திரைக்கதை.

நாயகன் ஆக பசீல் ஜோசப் காமெடிக் கலக்கலாக நடித்திருகிறார். முதல் பாதியில் பங்க் வைத்த ஹேர் ஸ்டைல் கெட்டப், பின் பாதியில் க்ளோஸ் கட்டிங் ஹேர் ஸ்டைல் என வெரைட்டி காட்டுகிறார். அவரது டைமிங் காமெடி, ஒன்லைனர் பஞ்ச் தான் படத்தில் பெரிய பிளஸ்.

வில்லன் ஆக டோவினோ தாமஸ் வில்லத்தனமாக நடித்து இருக்கிறார்.

காலேஜ் விழாவில் விஐபி ஆக வினீத் சீனிவாசன் வினீத் சீனிவாசனாகவே வருகிறார்.

விழாவை நடத்த விடாமல் தடுக்க வில்லன் வினீத் சீனிவாசனை கடத்தி வைப்பது கல கல.

நாயகி ஆக ரியா ஷிபு சும்மா வந்து போகும் கேரக்டர் தான். தர்சனா ராஜேந்திரன் கெஸ்ட் ரோல் தான்.

இவர்கள் போக ஜரீன் சிகாப், விஷ்ணு அகஸ்தியா, ஷான் ரஹ்மான் போன்றோரும் நடித்திருக்கிறார்கள்.

விஷ்ணு விஜயின் இசை ஓக்கே ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்.

எடிட்டிஙகில் இன்னமும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். 160 நிமிடங்கள் ரன்னிங் டைம். ஷார்ப் ஆக 125 நிமிடங்களில் முடித்திருக்கலாம்.

பால்சன் ஸ்கர்யா என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதித் தனியாக இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் அனிரூதன்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: 29 (2026) - ரொமாண்டிக் டிராமா!
Athiradi

சபாஷ் டைரக்டர்

  • முதல் பாதி காமெடி சீக்வன்ஸ் நேரம் போனதே தெரியவில்லை.

  • இண்ட்டர்வெல் பிளாக் சீனும், ப்ரீ க்ளைமாக்ஸ் சீனும் அதிரடி.

  • முல்லை பெரியார் பிரச்சனையைப் பேசிய விதம்.

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • இண்ட்டர்வல் பிளாக் சீனில் பெரிதும் பில்டப் கொடுத்த வில்லன் ரோல் சரியாக எழுதப்படாத பலவீனமான கேரக்டர் டிசைன்.

  • முன் பாதியை ஒப்பிடும்போது பின் பாதி ரொம்பவே ஸ்லோ.

  • பிட் பிட்டாக சில காமெடி சீன்ஸ் இருந்தாலும் மொத்தப் படமாக காமெடிக் கலக்கல் படம் என சொல்லும்படி அமையவில்லை.

  • அடுத்த சீன் என்ன? என்பதை சுலபமாக யூகிக்கும்படி இருப்பதால் சுவராஸ்யம் மிஸ்சிங்.

  • எமோஷனல் கனெக்ட் எங்குமே கிடைக்கவில்லை என்பது பலவீனம்.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+

சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி காமெடி, பின் பாதி சுமார் ரகம். டைம் பாஸ் படமாகப் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com