சிவகார்த்திகேயனுடன் நடித்த அட்லீ மனைவி பிரியா… இது எப்போ…?

Sivakarthikeyan and Priya
Sivakarthikeyan and Priya

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நிறைய கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர். அந்தவகையில் இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா சிவாவுடன் இணைந்து நடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

எந்த சினிமா பின்னணியும் இல்லாமல், முழுக்க முழுக்க தனது திறமையால் மட்டுமே சினிமாவிற்குள் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். சில படங்களிலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைப் பிடித்து, சினிமாவில் நிரந்தர இடத்தைப் பிடித்தார்.

சில கதாநாயகர்கள் இடையில் ஒன்றிரண்டு படம் நல்ல படங்களைக் கொடுக்காவிட்டால், மக்கள் அவர்களை மறந்துவிடுவார்கள். ஆனால், சிவகார்த்திகேயன் விஷயத்தில் தலைகீழ்தான். ஏனெனில், கடைசியாக வெளியான இரண்டு மூன்று படங்கள் சரியாக வரவில்லை எனினும், ரசிகர்கள் அவரின் அடுத்தப் படத்தில் கம்பேக் கொடுப்பார் என்று அவருக்கு துணையாக உள்ளனர்.

அவர்மேல் நிறைய கரைப் படிந்தாலும், அதனை கண்டுக்கொள்ளாமல் தன் வேலையில் மட்டும் கவனம் செலுத்தும் இவர், பலருக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார். அதன்பிறகு அயலான் படம் இவருக்கு சிறந்த கம்பேக்காக அமைந்தது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பக்கட்டத்தில் நடித்த ஒரு குறும்பட வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் அட்லீ மனைவி பிரியா இருவரும் 360 டிகிரி என்ற குறும்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
“என்னிடமே நீ சீக்கிரம் செத்துருவன்னு சொன்னாங்க” – மகாராஜா பட நடிகையின் எமோஷ்னல் டாக்!
Sivakarthikeyan and Priya

அட்லீ எத்தனையோ பேட்டிகளிலும் விருதுவிழாக்களிலும் தனது மனைவிதான் தன்னுடைய பலம் என்று கூறியுள்ளார். பிரியா ஹீரோயின் போல் உள்ளார், அவரை வைத்தே அட்லீ படம் எடுக்கலாம் என்றெல்லாம் ரசிகர்கள் ஒருசமயம் விவாதித்தது உண்டு. அந்தவகையில் தற்போது பிரியா ஏற்கனவே ஒரு ஹீரோயின்தான் என்பது தெரிந்து, ரசிகர்கள் இந்த வீடியோவை வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த குறும்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் தேடப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com