மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை மம்தா மோகன்தாஸ் ஒரு பேட்டியில் தன்னுடைய கம்பேக் குறித்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரமோஷன் துபாயில் நடந்தது. இந்தியாவிலும் அதிக அளவு ப்ரோமோஷன் செய்யப்பட்டது. அதேபோல் டிவி சேனல்களுக்கும் படக்குழு சென்று ப்ரோமோஷன் செய்தனர்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெறவில்லை. கடைசியாக அவர் வில்லனாக நடித்தப் படங்கள் மட்டுமே ஹிட் கொடுத்தன. அதேபோல், அவரது கதாபாத்திரமும் அதிகளவில் பேசப்பட்டன. இதனையடுத்து தற்போது மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜ்ய சேதுபதிக்கு ஒரு தாறுமாறான கம்பேக்காக அமைந்துள்ளது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பட்டையைக் கிளப்பியுள்ளது.
அந்தவகையில் மகாராஜா படக்குழு பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டது. அதில் நடிகை மம்தா தனது கம்பேக் குறித்து பேசியுள்ளார்.
"எனக்கு கேன்சர் நோய் உள்ளது என்று தெரிய வந்ததும் பலர் என் கண் முன்னே நீ சீக்கிரம் செத்துவிடுவாய் என்று சொன்னார்கள். ஆனால் நான் நம்பிக்கையுடன் அந்த நோயை எதிர்த்தேன். ஒரு பக்கம் கேன்சர் வளர்ந்து கொண்டிருக்கும்போதே நான் இன்னொரு பக்கம் அதைப் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொண்டிருந்தேன்.
அதன்பிறகு தான் முழுமையான சிகிச்சை எடுத்து தற்போது குணமாகி உள்ளேன். ‘மகாராஜா’ திரைப்படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். இந்த கேரக்டர் எனக்கு மீண்டும் ஒரு கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று பேசினார்.
மம்தா ஏற்கனவே விஷால் நடித்த ’சிவப்பதிகாரம்’, ரஜினிகாந்த் நடித்த ’குசேலன்’, மாதவன் நடித்த ’குரு என் ஆளு’, அருண் விஜய் நடித்த ’தடையற தாக்க’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் சேதுபதியுடன் மகாராஜா படத்தில் நடித்திருக்கிறார்.