அயலான் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்!

Ayalaan
Ayalaan
Updated on

நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெளியாக உள்ள அயலான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கபப்ட்டுள்ளது.

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலியனுடன் சிவகார்த்திகேயன் படம் நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தில் ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 5ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com