அயலான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரெடியா?

Ayalan
AyalanImge cred: Hd Posters

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான அயலான் படம் வசூலை சாதனையைப் படைத்து வரும் நிலையில் இரண்டாம் பாகத்தினுடைய அதிகாரமற்ற தகவல் வெளியாகவுள்ளது.

ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியான படம் அயலான். இப்படம் கிட்டத்தட்ட நான்கு வருடமாக தயாராகி வந்தது. இறுதியாக இந்த ஆண்டு பொங்கலுக்குத்தான் வெளியானது. பலமுறை வெளியாகும் தேதி மாற்றப்பட்டும் பல தடைகளைத் தாண்டியும் இந்த அயலான் படம் ஒருவழியாக பொங்கலுக்கு வெளியானது. தாமதிக்கப்பட்ட இந்த நான்கு வருடங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூடியது. மேலும் இப்படம் குழந்தைகளையும் ஈர்த்ததால் எதிர்பார்ப்பிற்கேற்ப வசூல் சாதனைப் படைத்தது.

தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு  வெளியான கேப்டன் மில்லர் படத்தை விட இந்த அயலான் படம் நல்ல வரவேற்பை பெற்றது என்றே கூற வேண்டும். அதேபோல் படத்தில் வரும் Tatoo என்ற அயலான் கதாப்பாத்திரமும் குழந்தை ரசிகர்களையும் குடும்ப ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டுத்தான் அயலான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோ அயலான் படத்தின் பாகம் இரண்டு எடுக்கலாம் என முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக அயலான் பாகம் 2 படத்தின் விஎஃபெக்ஷ் வேலைக்காக Phontom FX டிஜிட்டல் நிறுவனத்துடன் கேஜேஆர் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஜனவரி 18ம் தேதி அயலான் தயாரிப்பு நிறுவனம் Phonton FX டிஜிட்டல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாகவும் விஎஃபெக்ஷ் வேலைக்காக 50 கோடி ஒதுக்கியதாகவும் செய்திகள் வெளியாகிவுள்ளது.

இதையும் படியுங்கள்:
இணைந்த கமல் - சிவகார்த்திகேயன்.. டீசரை பார்த்து புகழ்ந்த இயக்குனர் நெல்சன்!
Ayalan

சிவகார்த்திகேயனுக்கு மொத்தம் ஐந்து படங்கள் இப்போது கைவசம் உள்ளன. ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 21 வது படம் உருவாகவுள்ளது. அதன்பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 22 வது படம். மேலும் வெங்கட் பிரபு மற்றும் வினயக் ஆகியோருடன் பேச்சு வார்த்தையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் அயலான் பாகம் 2 சிவகார்த்திகேயனின் 25 வது படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com