இணைந்த கமல் - சிவகார்த்திகேயன்.. டீசரை பார்த்து புகழ்ந்த இயக்குனர் நெல்சன்!

கமல் - சிவகார்த்திகேயன்
கமல் - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் டீசரை பார்த்து இயக்குனர் நெல்சன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பிரின்ஸ் படத்தின் தோல்விக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக மாவீரன் படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக அயலான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. பொங்கல் ரேசில் பெரிய படங்களுடன் போட்டியிட்ட அயலான் ஏலியன் கதையால் ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்தது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் 21வது படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. எஸ்கே21 என அழைக்கப்படும் இப்படத்தில் சாய் பல்லவியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே 5-ம் தேதி பிரம்மாண்ட விழாவுடன் தொடங்கியது. இந்த படம் ட்ராப் ஆகியது என்றெல்லாம் வதந்திகள் பரவி வந்த நிலையில், இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டீசரை பார்த்த இயக்குனர் நெல்சன், "வாவ்!!! இப்போதுதான் SK21 படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸரைப் பார்த்தேன். முழுக்க மிரட்டலாக வந்துள்ளது. நீங்கள் (ராஜ்குமார் பெரியசாமி) இந்த உணர்ச்சிகரமான பயணத்தில் என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் என்பதை இந்த உலகம் பார்ப்பதற்கு நான் காத்திருக்கிறேன். படக்குழுவுக்கு என்னுடைய பெரிய அப்ளாஸ்" என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பராக படம் இருக்கும் என ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com