

ஒரு 30 வருஷத்துக்கு முன் நான் 'சாவி' அலுவலகம் போகும் போது வள்ளுவர் கோட்டம் தாண்ட நேரிடும். 9 அல்லது 10 கிளாஸ் படிக்கும் பெண்கள் school uniform இல் ஆண் நண்பர்களுடன் ஆங்காங்கே காதலித்து கொண்டு இருப்பார்கள்..
இது bus view மட்டும் அல்ல. எல்லா ரயில்வே ஸ்டேஷன்களிலும் இதே காட்சிதான்.
பதின்ம வயது ஈர்ப்பு. பின்னாளில் எத்தனை பெரிய சங்கடங்களை தன்னுள் வைத்து இருக்கும் என்று அறியாத பெண்களா இவர்கள்? பரிதாபம்தான் தோன்றும்!
தவிர்க்க நினைத்து, முடியாமல் பார்த்தேன் 'Bad girl' தமிழ் படத்தை!
'BAD GIRL' என்று தலைப்பு வைத்து பிராமண பெண் நெறி கெட்டு பேசும் வசனங்கள் வைத்ததாலும், டீஸர் பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. இயக்குநரும் ஒரு பெண். தயாரிப்பு வெற்றிமாறன் என்பதாலும் சூடு பற்றியது.
ஏகப்பட்ட சென்சார் கட்களை தாண்டி.. very good idea… but badly executed படமாக வந்து உள்ளது.
இது ஒரு coming of age திரைப்படம்.15 வயது முதல் 35 வயது வரை ஒரு பெண்ணின் உளவியல் தாக்கங்களை பேசுகிறது.
கட்டுப்பாடான ஒரு குடும்பத்தில் வளரும் பெண் adolescence காரணமாக காதலில் விழுகிறாள். School excursion செல்லும்போது காதலனுடன் (அவனும் class mate தான்) என்னவோ செய்து மாட்டிக் கொண்டு, வேறு பள்ளி செல்கிறாள். நடுவே அவனுடன் ஓடிப்போக நினைத்து வீட்டை விட்டு வெளி ஏறுகிறாள்.
அந்த பையன் வராமல் போகவே இவள் வேறு school மாறுகிறாள். இந்த முறை hostel இல்தான் படிப்பேன் என்று அடம் பிடிக்கிறாள்.
மற்ற தோழிகள் எல்லாரும் normal ஆக இருக்க, இவள் மட்டும் soul mate ஐ தேடித் தேடி நிஜமான காதலுடன் வெவ்வேறு ஆண்களுடன் ஒரு மார்க்கமாக மயக்கத்தில் சுற்றுகிறாள்.
எல்லாரும் இவளை பயன்படுத்திக் கொண்டு கெட்ட பெயரும் சூட்டி விளக்குகிறார்கள்.
பாட்டி, அம்மா அப்பா, தோழி என யார் பேச்சும் கேட்காமல்.. இஷ்டத்துக்கும் வாழ்ந்து விட்டு, "எனக்கு மட்டும் ஏன் இப்படி தோணுது!?" என்று கேட்டுக்கொண்டே இருக்கிறாள்.
தூக்கம் இல்லாமல், சரியாக சாப்பிடாமல் வயதான தோற்றம் வந்து கடைசியில் தனி வீடு எடுத்து பூனைகளுடன் சுதந்திரமாக வாழ்வதாக முடிக்கிறார்கள்.
எம்மா ரம்யா, இதுதான் நீ விரும்பிய பெண் சுதந்திரமா?
உன்னோட அம்மா அப்பா பாட்டியைவிட அந்த useless boy friend முக்கியமா?
பார்க்கும் ஆண்களிடம் எல்லாம் சகஜமாக உறவு வைத்து கொள்வதுதான் பெண் உரிமையா!?
மொத்தத்தில் ஏற்கனவே பெண்கள் கெட்டு குட்டி சுவர் ஆகி இருக்கும் இந்த காலத்தில் மேலும் நஞ்சு கலக்கும் படம் எடுத்து என்ன சாதிக்க போகிறார்கள்?
நான் என்ன எதிர்பார்த்தேன் என்றால்…
"ஏம்மா ரம்யா, நீ வளர்க்கின்ற செல்ல பூனை ஒண்ணு தொலைஞ்சு போய்டுச்சு என்றதும் எப்படி தவிச்சு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினே..
அம்மா, அது indoor cat. அதுக்கு வேட்டை ஆட தெரியாது. வெளி உலகம் புரியாது. வீட்டுக்கு தானா வர வழியும் தெரியாது. அது செத்திடும் அப்படின்னு உருகுறியே..
"உன்னையும் ஒரு indoor cat மாதிரிதானே வளர்த்து இருப்போம். நீ சுதந்திரம் தேடி போயிட்ட... அப்போ நாங்க எவ்ளோ கஷ்டம் அனுபவிச்சு இருப்போம்னு புரியுதா? ஒரு பூனை ஒரு night காணாமல் போனதுக்கே துக்கப்படறே நீ, ஒரு சின்ன பொண்ணு" என்று தாயார் சொல்ல அவள் அதில் உள்ள உண்மையை புரிஞ்சிப்பா.
அனாலும் அவள் தனியா வாழும் சுதந்திரத்தை விரும்புவதால் ரம்யா இஷ்டபடியே பெற்றோர் அனுமதிக்கிறார்கள். என்றாவது முடித்து இருக்கலாம்.
இசை திரைக்கதை வசனம் நடிப்பு எல்லாமே நன்றாக உள்ளது.
கதாநாயகியின் அம்மாவாக சாந்திபிரியா கச்சிதமான, கனமான நடிப்பு. ('மதுரை மரி கொழுந்து வாசம்' ஹீரோயின்!)
பெருமாள் இனிமே நம்ம ஆத்துல எழ பண்ணமாட்டார் என்று கண்ணீர்விடும் பாட்டி..
"அவனை நம்பாதே!" என்று எச்சரிக்கும் தோழிகள் எல்லாருமே நிறைவாக செய்து உள்ளனர்.
வித்தியாசமான கதை. ஆனால் கலாச்சார காவலர்கள் அதிர்ந்து போவார்கள்.
இந்த பெண் Bad girl அல்ல. Poorly Projected Sad Girl!