குளிக்க பால்; தூங்க ரோஜாப்பூ மெத்தை: தயாரிப்பாளரை ஓடவிட்ட நடிகர்!

குளிக்க பால்; தூங்க ரோஜாப்பூ மெத்தை: தயாரிப்பாளரை ஓடவிட்ட நடிகர்!
Published on

சினிமா தயாரிப்பாளர்கள் பிரபல நடிகர்களிடம் சென்று தனது படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டால், அதற்கு சில நடிகர்கள் போடும் கண்டிஷன்களைக் கேட்டால் தலை சுற்றி விழுந்து விடும்அளவுக்கு இருக்கும். இது பிரபல நடிகைகளுக்கும் பெருந்தும். அப்படித்தான் ஒரு நடிகரிடம் சென்று தயாரிப்பாளர் ஒருவர் தனது படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டபோது, அவர் குளிக்க தினமும் 25 லிட்டர் பாலும், தூங்க ரோஜாப்பூ மெத்தையும் கேட்டு தயாரிப்பாளரை ஓட விட்டு இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, பிரபல போஜ்புரி திரைப்பட நடிகர் ரவி கிஷன்தான்.

நடிகரும் பாஜக எம்பியுமான ரவி கிஷன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், “பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்பின், 'கேங்க்ஸ் ஆப் வசேபூர்' படத்தில் நடிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்பை எனது திமிர் காரணமாக இழந்தேன். அந்தப் படத்துக்காக என்னிடம் கேட்டபோது, நான் குளிப்பதற்கு பாலும், தூங்குவதற்கு ரோஜாபூ மெத்தையும் கேட்டேன். அந்த சமயங்களில் நான் என்னை ஒரு பெரிய ஸ்டாராக நினைத்துக் கொண்டேன். தினமும் அவரால் 25 லிட்டர் பால் தயார் செய்ய முடியாததால் என்னை அவர்கள் படத்தில் நடிக்க வைக்கவில்லை.

சில சமயங்களில் திடீரென பணமும், புகழும் கிடைத்தால் மனம் இப்படிதான் தளர்ந்து போகிறது. குறிப்பாக, மும்பை போன்ற பெரு நகரங்கள் அனைவரையும் பைத்தியம் பிடிக்க வைப்பவை. அதனால்தான் அதுபோன்ற சமயங்களில் நான் என்னுடைய கட்டுப்பாட்டை இழந்திருந்தேன்” என்று அந்தப் பேட்டியில் அவர் கூறி இருக்கிறார். ‘அடடா… இதற்கு நம்மூர் கதாநாயகர்கள் எவ்வளவோ பரவாயில்லை போல இருக்கிறதே’ என்று நினைக்கத் தோன்றுகிதுதானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com