பில்லா திரைப்படம் ரீ-ரிலீஸ் உச்சகட்ட ஆர்பாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

Billa movie re-release
Billa movie re-release

கடந்த சில நாட்களாகவே பழைய எவர் க்ரீன் திரைபடங்கள் திரையரங்குகளில் தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து தியேட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமாக இருந்த திரைப்படங்கள் அனைத்தும் மீண்டும் ஒவ்வொன்றாக திரையிடப்படுகிறது.

என்னதான் தங்கலான், வேட்டையன் மற்றும் கங்குவா போன்ற புதிய திரைப்படங்களை எதிர்பார்த்து ஒருபுறம் ரசிகர்கள் காத்திருந்தாலும் மறுபுறம் அவரவர் மனதிற்கு மிகவும் நெருக்கமான பழைய படங்களைக் காணவும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்தவகையில் தற்போது அஜீத் நடிப்பில் ரசிகர்களின் ஆராவார வரவேற்பை பெற்ற பில்லா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினியின் பில்லா:

1980 ஆம் ஆண்டு இயக்குநர் ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பில்லா. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஸ்ரீ பிரியா, பாலாஜி, தேங்காய் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். மேலும் ரஜினிகாந்த் இந்த படத்தில் இரண்டு விதமான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதாவது ஒருபுறம் கடத்தல்க்காரனாகவும் மறுபுறம் அப்பாவியான நபராகவும் தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பாற்றலை வெளிக்காட்டி இருப்பார்.எனவே இது இவருக்கு ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாகவே அமைந்தது. திரையரங்குகளில் சுமார் 260 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

அஜித்தின் பில்லா:

ரஜினியின் பில்லா திரைப்படம் வெளியாகி சரியாக 17 ஆண்டுகள் பிறகு அஜித் நடிப்பில் 2007ம் ஆண்டு இயக்குநர் விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பில்லா திரைப்படம் வெளியானது. மேலும் இப்படத்தில் நமீதா, பிரபு, ரஹ்மான், ஆதித்யா மேனன், சந்தானம், பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது நடிகர் ரஜினியின் பில்லா பட ரீமேக் என்றாலும்கூட, நடிகர் அஜீத் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றார். நடிகர் அஜித்திற்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்த பில்லா அவரின் சினிமா பயணத்திற்கும் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதோடு இது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை எட்டியது.

இதையும் படியுங்கள்:
அண்ணனை வைத்து படம் இயக்கும் தனுஷ்... படத்தின் மாஸ் அப்டேட்!
Billa movie re-release

ரீ-ரிலீஸ்கான ரசிகர்களின் வரவேற்பு:

கடந்த சில மாதங்களாகவே ரீ- ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது பெருகிக்கொண்டே இருக்கிறது. கமலின் ஆளவந்தான், ரஜினிகாந்தின் முத்து போன்ற பழைய ரீ-ரிலீஸ் திரைபடங்களுக்கு ரசிகர்களின் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் 3, வடசென்னை, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்ததாக படங்கள் வெளியானது. அதேபோல காதலர் தினத்தை முன்னிட்டு அது சார்ந்த திரைப்படங்களின் அடிப்படையில் சிவா மனசுல சக்தி, 96, பிரேமம், சீதா ராமம் போன்ற காதல் படங்களும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. இதன்மூலம் ரீ-ரிலீஸ் திரைப்படங்களுக்கான ரசிகர்கூட்டமானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.

அதே நேரத்தில் நேற்று அஜித்தின் பில்லா 1 திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படடுள்ளது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்திற்கு பலமுறை நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனையடுத்து, படம் மீண்டும் நீண்ட மாதங்களுக்கு பிறகு ரீ-ரிலீசானதையொட்டி அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த ஆர்ப்பாட்டதோடு இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com