நடிகர் தனுஷ் இயக்கும் புதிய படத்தில் செல்வராகவன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியான நிலையில் புதிய லுக்கில் இருக்கும் செல்வராகவன் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கும் 50ஆவது படத்துக்கு, ராயன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் தனுஷின் 50வது பட அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
நடிகர் தனுஷ் இயகுனராக தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். தனுஷின் இயக்கத்தில் அவரே நடிக்க உள்ள அவருடைய 50வது படத்துக்கு தற்காலிகமாக தனுஷ் 50 எனப் பெயரிடப்பட்டது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்பட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தான் இயக்கிய முதல் படமான, பவர் பாண்டியில் காதலை சொன்ன நடிகர் தனுஷ், தனது அடுத்த படமான ராயனில் அதிரடி ஆக்ஷனை கையாண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் செலவராகவன் நடிப்பதாகவும் மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷை முதல் முறை நடிகராக உருவாக்கியவர் சகோதரர் செல்வராகவன். வளர்த்து விட்ட அண்ணனை வைத்தே தற்போது நடிகர் தனுஷ் படம் இயக்கவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.