Blue Stat Movie Director Jeyakumar
Blue Stat Movie Director Jeyakumar

"பிரச்சனைகள்  இருக்கும் வரை ப்ளூ ஸ்டார் போன்ற படைப்புகள் வரும்" ப்ளூ ஸ்டார் படம் இயக்குநர் ஜெயக்குமார் சிறப்பு பேட்டி!

பா.ரஞ்சித் தயாரிப்பில்,ஜெயக்குமார் இயக்கி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றி நடை போட்டு வருகிறது. கிரிக்கெட் விளையாட்டில் உள்ள ஜாதி ஏற்ற தாழ்வை வெளிச்சம் போட்டு காட்டும் இப்படம் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. இப்படத்தின் டைரக்டர் ஜெயக்குமார் நமது கல்கி ஆன்லைன் இதழுக்காக அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம்..
Q

கிரிக்கெட் விளையாட்டை களமாக வைத்து   படம் எடுக்கும்  எண்ணம் வந்ததன் காரணம் என்ன?            

A

நான் வசிக்கும் அரக்கோணம் பகுதியில் உள்ள கிராமத்தில் கிரிக்கெட் அணிகள் பிரபலம். இந்த படத்தில் ரஞ்சித் கேரக்டரில் வரும் அசோக் செல்வன் கதாப்பாத்திரத்தை என் சொந்த அண்ணனை மனதில் வைத்து உருவாக்கினேன். என் அண்ணன் எங்கள் பகுதியில் சிறந்த கிரிக்கெட் பிளேயர்.சாந்தனு நடித்த ராஜேஷ் கேரக்டர் கூட என் உறவு முறையில் உள்ள அண்ணன் ஒருவரை மனதில் வைத்து உருவாக்கியதுதான். இதோடு சில கற்பனைகளையும் சேர்த்து உருவாக்கியது தான் ப்ளூ ஸ்டார். ப்ளூ ஸ்டார் என்ற கிரிக்கெட் அணியும் எங்கள் பகுதியில் உள்ளது.      

Q

 ங்கள் பகுதியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டில் ஜாதி உள்ளதா?  

A

ங்கள் ஊர் கிரிக்கெட் மட்டுமல்ல. இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டில் ஜாதி உள்ளது. சாப்பாட்டில் இருந்து கோவில் வரை ஜாதி இல்லாத இடமே இந்தியாவில் இல்லை என்று சொல்லாம். ஜாதி மறைந்து ஒன்றாக இணைந்து விளையாடினால் பல வெற்றிகளையும், தங்க பதக்கங்களையும் பெறமுடியும் என்பதை தான் என் படத்தில் சொல்ல வருகிறேன். விளையாட்டு மட்டுமல்ல, விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் மாற்றம் வரும். ஒன்று சேர்வதுதான் இங்கே பிரச்சனையே.              

Q

ங்கள் ஆசான் பா.ரஞ்சித் தயாரிக்கும் படங்கள் எல்லாமே ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை சொல்லும் படங்களாக இருக்கிறதே? மாற்று வகை படங்களை நீங்கள் யோசிக்க மாட்டீர்களா?                     

A

ங்கே இந்த பிரச்சனை இருப்பதால் நாங்கள் பேசுகிறோம். ஜாதிய ஒடுக்குமுறைகள் இருக்கும் வரை இதை மைய்யபடுத்தி படங்கள் வந்து கொண்டு தான் இருக்கும். இது போன்று பிரச்சனைகளால் பாதிக்கப்படும் மனிதனுக்கு நான் இருக்கிறேன் என ஆறுதல் சொல்லும் முயற்சிதான் இந்த படைப்புகள் எல்லாம்.               

Q

டத்தில் வருவதுபோல் உள்ளே அனுமதிக்காத கிரிக்கெட் கிளப்களை பார்தது உண்டா?                     

A

பார்த்திருக்கேன். " இந்த கிளப்களில் விளையாட தகுதி வேணும், உங்களுக்கு அந்த தகுதி இல்லை "   என்ற வார்த்தையை யும் கேட்டிருக்கிறேன்.  

Q

டத்தில் அம்பேத்கரை ஒரு அடையாளமாக பயன்படுத்தி உள்ளீர்களே?

A

டையாளம் என்பதற்காக மட்டும் பயன்படுத்தவில்லை. எங்கள் அரக்கோணத்தில் பல இடங்களில் அம்பேத்கார் சிலைகளை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். அம்பேத்கார் இல்லாத அரக்கோணத்தை நினைத்து கூட பார்க்க முடியாது.                       

Q

கீர்த்தி பாண்டியன் கேரக்டரை சிறப்பாக உருவாக்கி உள்ளீர்களே சொந்த வாழ்வின் பிரதிபலிப்பா?   

A

நான் சென்னை ஓவிய கல்லூரியில் படிக்கும் போது அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் வருவேன் அப்போது கீர்த்தி பாண்டியன் போன்ற பெண்ணை சந்தித்து உள்ளேன். அந்த பெண்ணை மனதில் வைத்து உருவானது தான் இந்த கேரக்ட்டர். சென்னை அரக்கோணம் ரயில் பயணத்தில் இது போன்ற பல கதைகள் கிடைக்கும்.

Q

ங்கள் அடுத்த படத்தின் களம் என்னவாக இருக்கும்?       

A

நான் அதிகம் புத்தகம் வாசிப்பேன். அந்த புத்தகத்தின் அடிப்படையில்ல கூட களம் உருவாகலாம். ஆனால் என் படம் மனிதம் பேசுபவையாக இருக்கும். 

Q

ங்களுக்கு பிடித்த தலைவர்கள் யார்?             

A

 மார்க்கஸ், அம்பேத்கார், மாவோ, பெரியார்.                           

Q

ப்ளூ ஸ்டார் பட விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசிய விஷயத்தை சிலர் ஜாதிய கண்ணோட்டத்துடன் சமூக வலைதளங்களில் அணுகுகிறார்களே? அதை பற்றி உங்கள் கருத்து என்ன?   

A

ப்ளூ ஸ்டார் போன்ற படங்களின் தேவை அதிகம் உள்ளதேயே இது காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
"இந்திய சினிமா உலக சினிமாவாக மாறி வருகிறது" - அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்!
Blue Stat Movie Director Jeyakumar

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com