பாபி சிம்ஹாவின் 'வசந்த முல்லை'!

பாபி சிம்ஹாவின் 'வசந்த முல்லை'!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

அறிமுக இயக்குனர் ரமணன் புருஷோத்தமா எழுதி இயக்கிய 'வசந்த முல்லை' திரைப்படத்தை SRT என்டர்டெயின்மென்ட் & முத்ராவின் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளனர்.

ஆக்‌ஷன் திரில்லர் ஜானராக 'வசந்த முல்லை' படம் தயாராகவுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. தெலுங்கு மற்றும் கன்னடத்தில் 'வசந்த கோகிலா' என்ற பெயரில் வெளியாக உள்ளது.

பாபி சிம்ஹா மற்றும் காஷ்மீர் பர்தேஷி, ரேஷ்மி மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

'வசந்தா முல்லை' படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தற்போது நடிகர் ஆர்யா போஸ்டர் ரிலீஸ் செய்து நடிகர் ஆர்யாவும் இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 'வசந்த முல்லை' திரைப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com