நாவல் எழுத்தாளராக மாறிய பாலிவுட் நடிகை ஷுமா குரேஷி!

Huma Qureshi book
Huma Qureshi book
Updated on

பிரபல பாலிவுட் நடிகரான ஷுமா குரேஷி தமிழில் காலா, வலிமை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஷுமா குரேஷி பெங்களூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் 'ஸெபா ஆன் ஆக்சிடென்டல் சூப்பர் ஹீரோ என்ற நாவலை' எழுதி வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுவையில் ஸெபா ஆன் ஆக்ஸிடென்டல் சூப்பர் ஹீரோ நாவல் பேண்டஸி பிக்சன் நாவல் ஆகும். 1992 முதல் 2019 வரை நடைபெற்ற கதைகளை கொண்டிருக்கும். இந்த நாவல் ஸெபா என்ற பெண்ணைப் பற்றியது. லீலா என்ற வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஸெபா கதையை நாவலாக எழுத வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. அதைத்தொடர்ந்து கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த போது அதற்கான பணியை தொடங்கினேன். அப்பொழுது இதை டிவி சீரியலாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. பிறகு தொடர்ந்து நாவலாக எழுத தொடங்கினேன். வருங்காலத்தில் இதை கண்டிப்பாக படமாக உருவாக்குவேன். நான் ஒரு கலைஞர், எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி என்னுடைய படைப்புகளை வெளிப்படுத்தி வருகிறேன். நடிப்போ, எழுத்தோ எதுவாக இருந்தாலும் எனது படைப்பை வெளிப்படுத்தும் கருவியாக அதை பயன்படுத்த முயற்சித்து வருகிறேன்.

இதையும் படியுங்கள்:
கேம் சேஞ்சர்: புதிய தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர்!
Huma Qureshi book

இந்நாவல் ஒரு பெண் எதிர் கொள்ளும் சவால்கள், வெற்றிகள், தோல்விகளை உள்ளடக்கிய வாழ்க்கை அனுபவமாக இருக்கும். மேலும் தொடர்ந்து எழுதுவேன். நாவல், கதைகள் என்று என்னுடைய எழுத்துப் பணிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது உருவாகி இருக்கிறது என்று கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com