ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தின் தகவலை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர்.
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் ஊழலுக்கு எதிரான கதைக்களத்தை கொண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து நீண்ட ஆண்டுகள் கழித்து இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவு செய்தார். அதற்காக நடிகர் கமலஹாசன் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக படம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் தற்போது தொடங்கி நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பாதியில் நின்ற போது இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கத் தொடங்கினார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். கியாரா அத்வானி படத்தில் நாயகி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் தில் ராஜூ படத்தை பற்றி பேசியுள்ளார். நல்ல திரைப்படங்கள் உருவாக காலதாமதம் ஏற்படுவது இயல்பு. இயக்குனர் ராஜமவுலி, சுகுமார், ஷங்கர் போன்றவர்கள் தங்கள் எடுக்கும் காட்சிகள் திருப்தியாக வரும் வரை சமரசம் செய்யாமல் தொடர்ந்து உழைப்பவர்கள். கேம் சேஞ்சர் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இருக்கிறது. 100 சதவீத பணிகள் முடிவடைந்த உடன் படம் பற்றிய அப்டேட் வெளியிடப்படும். மிக விரைவில் படம் திரைக்கு வரும் என்று கூறியுள்ளார்.