(1) நடிகை ஜோதிகா சொல்லும் செய்தி என்ன..??
தனது உடலின் (9 கிலோ) எடையை கடந்த மூன்று மாதங்களில் கணிசமாக குறைக்க, மிகச் சரியான திசையில் வழி நடத்தியவர் நடிகை வித்யாபாலன்தான் என்று ஜோதிகா சொல்கிறார்.
"எடையைக் குறைப்பது என்பது எப்போதுமே ஒரு போராட்டமாக எனக்கு இருக்கும். கடுமையான உடற்பயிற்சியுடன், சீரான உணவு, குடல் ஆரோக்கியம், செரிமானம், முறையான ஓய்வு என எல்லாமே அவசியம். உடல் எடை, மன நிலை இரண்டிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க உதவும் வழி என்ன என்பதை நான் உணரக் காரணம், வித்யாபாலன், தான் ஜிம்முக்கு போகாமலேயே தனது உடல் எடையை குறைப்பது குறித்து பேசி சென்ற ஆண்டு வெளியிட்ட பயண வீடியோதான். இது என்னை மிகவும் ஈர்த்தது. அதன்மூலம், இப்போது நான் முன்பிருந்ததை விட அதிக உற்சாகமாகவும், நம்பிக்கையுடனும் என்னை உணர்கிறேன். எதிர் காலம் வளமாக இருக்க எடைக்குறைப்பு அவசியம்."
வீடியோவும் சில சமயங்களில் உதவிக்கரம் நீட்டும். சரிதானே மக்களே!
(2) "நான் அவருக்கு தங்கையாக நடிப்பதா..?? நோ வே! " சொன்னது யார்?
அநேக வெற்றிப்படங்களை இயக்கியவர் மன்சூர்கான். டிடிஎல்ஜே ; பாசிகர் ; குச்-குச் ஹோதா ஹை; கரண் அர்ஜுன் போன்ற படங்களில், நடிகர் ஷாருக்கானுடன், கஜோல் ஜோடியாக நடித்து இவர்கள் பிரபலமாகி இருந்தனர்.
இதிலிருந்து மாறுபட்ட கோணத்தில், கேரக்டரில் இவர்களை நடிக்க வைக்க நினைத்த மன்சூர், "ஜோஷ்" படக்கதையை, தன்னுடைய வீட்டில் வைத்து கஜோலிடம் கூறியவுடன், கஜோல் கிளம்பி விட்டார்.
"நடீப்பீங்களா? பதில் சொல்லுங்கள்" என மன்சூர் கேட்கையில், "முடியாது" எனக் கூறிவிட்டார் கஜோல். காரணம்...?
அது, ஷாருக்கானின் தங்கை கேரக்டர். இருவரும் காதல் ஜோடியாக பிரபலமாக இருக்கையில், எப்படி தங்கை வேடம்...? மறுத்து விட்டார்.
மன்சூர்கான் மிகவும் யோசித்து ஐஸ்வர்யா ராயைக் கேட்க, அவர் ஒப்புக் கொண்டார். 'ஜோஷ்' பட ரிலீஸிற்குப் பிறகு, ஷாருக்கான் - ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து காதலர்களாக நடித்த 'மொஹபத்தேன்' படம் சூப்பர் ஹிட்டானது. இவர்கள் இடையேயான கெமிஸ்ட்ரி, ரசிகர்களால் இன்றும் பேசப்படுகிறது.
நடிகர்கள்- நடிகைகள் ஜோடியாக நடிப்பதும், அண்ணன்-தங்கையாக நடிப்பதும் சினிமா உலகிற்கு புதிது கிடையாது. இருந்தபோதும், கஜோலின் மனது ஒப்புக்கொள்ளவில்லை. ஷாருக்கானுக்கு மிகவும் ராசியான ஹீரோயின்களில் ஒருவர் கஜோல். இருவரும் நல்ல நண்பர்கள். தவிர இரண்டு குடும்பத்தினரும், நட்புடன் பழகி வருகின்றனர் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.