'பொம்மை' படத்தின் புதிய அப்டேட்!

'பொம்மை' படத்தின் புதிய அப்டேட்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

எஸ் ஜே சூர்யா - பிரியா பவானிசங்கர் நடிப்பில் உருவாகியுள்ள 'பொம்மை' படத்தை 'மொழி', 'அபியும் நானும்', 'பயணம்', 'காற்றின் மொழி' ஆகிய வெற்றி படங்களை இயற்றிய ராதா மோகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் ஆன்டனி இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார்.

இது ஒரு சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 'பொம்மை' படத்தின் முதல் பாடலான ‘முதல் முத்தம்’ பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com