பிரம்மாஸ்திரா சீக்குவல் அப்டேட்ஸ்!

பிரம்மாஸ்திரா சீக்குவல் அப்டேட்ஸ்!

Published on

இயக்குனர் அயன் முகர்ஜி தனது பிரம்மாஸ்திரா சீக்குவல் பற்றிய சில விவரங்களைப் பகிர்ந்துள்ளார்,

பிரம்மாஸ்திரா பார்ட் 2 மற்றும் 3 எப்போது திரையரங்குகளில் வரும் என்பது உட்பட சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ள இயக்குநர், பிரம்மாஸ்திரா பாகம் 2: தேவ் 2026 டிசம்பரிலும், பாகம் 3: 2027 டிசம்பரிலும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பில், இயக்குனர் எழுதினார், "பாகம் ஒன்றுக்கான ரசிகர்களின் அனைத்து அன்பையும் பின்னூட்டங்களையும் உள்வாங்கிய பிறகு, பாகம் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தினேன், இது பாகம் ஒன்றை விட பெரியதாகவும், கூடுதல் லட்சியம் கொண்டதாகவும் இருக்கும் என்று எனக்குத் தெரியும். எனவே இரண்டு படங்களையும் ஒன்றாகத் தயாரிக்கப் போவதாக முடிவு செய்துள்ளோம்!

பிரம்மாஸ்திரா சீக்குவல் படங்களுக்குச் செல்வதற்கு முன், அவர் முதலில் ஒரு "சிறப்பு திரைப்படத்தில்" பணியாற்றப் போவதாகவும் அயன் சுட்டிக்காட்டினார். ஆனால், தனது புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை இயக்குநர் தெரிவிக்கவில்லை. ஆனால், அந்த வாய்ப்பானது "எனக்கு சவால் விடும் மற்றும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தும் ஒரு வாய்ப்பு, அதிலிருந்து நான் கற்றுக் கொள்வேன், உத்வேகம் பெறுவேன் அத்துடன் நான் அங்கு வளருவேன்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிரம்மாஸ்திரா: பாகம் ஒன்று-சிவா 2022 இல் வெளியிடப்பட்டது. இதில் ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பிரம்மாஸ்திரா ஒன்றில் சிவா, தனது காதலியான ஈஷாவுடன் இணைந்து தனது சிறப்பு சக்திகளின் தோற்றத்தைக் கண்டறிய ஒரு பயணத்தைத் தொடங்குகிறார், அதில் குருஜி தலைமையிலான பிரம்மன்ஷ் என்ற ரகசிய சமூகத்துடனான தனது தொடர்பைக் கண்டுபிடிப்பார். இந்தக் கதையின் தொடர்ச்சியை பாகம் 2 & 3 ல் காணலாம்.

logo
Kalki Online
kalkionline.com