விமர்சனம்: பிரேக்பாஸ்ட் - கணவன் மனைவி பிரேக் அப் ஏன்?

Breakfast
Breakfast
Updated on
ரேட்டிங்(3 / 5)

இன்றைய தினத்தில் சிறிய பிரச்சனைகளுக்காக கூட தம்பதிகள் கோர்ட் படி ஏறி விவாகரத்து பெறுகிறார்கள். இதை மையப்படுத்தி வெளிவந்துள்ள படம் பிரேக்பாஸ்ட். Ar. காந்தி கிருஷ்ணா இப்படத்தை இயக்கி உள்ளார். பிக் பாஸ் புகழ் ராணவ் ஹீரோவாகவும், மலையாளத்தில் சில படங்கள் நடித்த ரோஸ்மின் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்கள்.

ராணவ் படித்தவர். சரியான வேலை இல்லாமல் இருக்கிறார். ஒரு மிகப்பெரிய பிஸ்கட் கம்பெனியின் முதலாளியாக இருக்கிறார் ரோஸ்மின். ஒரு நாள் பிஸ்கட் கம்பெனியின் உள்ள ஒரு ஓடாத மெஷினை ஓட வைக்கிறார். இதனால் ரோஸ்மிக்கு ராணவை பிடித்து போகிறது. இது காதலாக மாறி விடுகிறது. ரோஸ்மினின் அப்பாவுக்கு இந்த காதல் பிடிக்கவில்லை. இருந்தாலும் ரோஸ்மினின் அப்பாவை மீறி திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணம் ஆன சில நாட்களுக்கு பின் கிராமத்தில் இருக்கும் ராணவின் அம்மா அப்பா ராணவுடன் தங்க சென்னைக்கு வருகிறார்கள். அம்மா, அப்பாவின் கிராமத்து நடவடிக்கைகள் ரோஸ்மினுக்கு பிடிக்காததால் இவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். இது மிகப்பெரிய பிரச்சனையாக ரோஸ்மின் - ராணவ் இடையே விரிசல் ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கிறது.

இந்த சம்பவங்களை எல்லாம் ஒரு கதை போல் தன்னிடம் கவுன்சிலிங்கிற்கு வரும் ஒரு இளம் தம்பதிகளுக்கு சொல்கிறார் மன நல மருத்துவர் கஸ்தூரி. இவர் ஏன் இப்படி சொல்கிறார்? கவுன்சிலிங் வந்த இந்த தம்பதிகள் யார் என்று சொல்கிறது மீதி கதை.

படத்தின் முதல் பாதியில் வரும் காதல் காட்சிகள், ஏழை இளைஞனை பணக்கார பெண் காதலிப்பது போன்ற விஷயங்கள் 1990 கால கட்ட படத்தை நினைவு படுத்துகின்றன. ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதை அப்படியே யூ டர்ன் அடித்து நிகழ்காலத்தில் தம்பதிகள் இடையே நடக்கும் சிறு பிரச்சனைகள் எப்படி ஈகோவாக மாறி எப்படி விவாகரத்து வரை செல்கிறது.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி சுவாரசியமானதாகவும், இன்றைய இளம் தம்பதிகளுக்கு தேவையான கருத்துக்களை கொண்டிருப்பதாகவும் இருக்கிறது. காதல் பின் புலம் கொண்ட கதையில் வைரமுத்துவின் பாடல் வரிகள் படத்தை கூடுதலாக ரசிக்க உதவி செய்துள்ளது. ஜி.வி பிரகாஷின் இசை காதல் காட்சியில் காதல் உணர்வை நமக்குள் கடத்தி விடுவதில் முக்கிய பங்காற்றி உள்ளது.

இதையும் படியுங்கள்:
Interview: 'சிவாஜி' முதல் 'இந்தியன் 2' வரை: ஷங்கர் படங்களில் காந்தி கிருஷ்ணாவின் ரகசிய பங்களிப்பு - அதிரடி நேர்காணல்!
Breakfast

ரோஸ்மின் சில மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பதை இவரின் சிறந்த நடிப்பே புரிய வைத்து விடுகிறது. காதல் காட்சிகளை விட ஈகோ பிடித்த பெண்ணாக நடிக்கும் போது சிறப்பாக நடித்துள்ளார். சரியான கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம்.

ஹீரோ ராணவ் நன்றாக நடித்திருக்கிறார். இருந்தாலும் இன்னும் சிறிது எபொர்ட் போட்டிருக்கலாம். அடுத்தடுத்த படங்களில் எபொர்ட் போடுவார் என நம்புவோம். கஸ்தூரி ஒரு மன நல மருத்துவராக சிறப்பாக நடித்துள்ளார். இவரின் கேரக்டரில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. இதை சொன்னால் சுவாரசியம் போய்விடும்.

ஈகோ பிரச்சனையால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் படி ஏறும் தம்பதிகள் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் யோசிக்க வேண்டும் என்று சொல்கிறது பிரேக்பாஸ்ட்.

மொத்தத்தில் இந்த பிரேக்பாஸ்ட் தம்பதிகளுக்குள் பிரேக் அப் ஏன் என்று எமோஷனலாக சொல்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com