'கேப்டன் மில்லர்' இந்தி பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Captain Miller
Captain Miller

கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதன் இந்திப் பதிப்பின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் பல சர்ச்சைகளை தாண்டி வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கி உள்ளார். கிராமத்தில் உள்ள ஜாதி கொடுமைகளை வெறுத்து ஆங்கிலேய ராணுவத்தில் சேருகிறார் தனுஷ். பிரிட்டிஷ் ராணுவம் தனது மக்களையே தன்னை வைத்து கொல்ல வைப்பதை பார்த்து வெறுப்படையும் தனுஷ் போராளியாக மாறி ஆங்கிலேய அரசை எதிர்க்கிறார்.இதனால் ஜமீன்தாரும், பிரிட்டிஷ் அரசும் தனுஸை ஒழிக்க நினைக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்பதுதான் கதை.

எத்தனை குண்டுகள் பாய்ந்தாலும் ஹீரோ மீது ஒரு குண்டு கூட விழாமல் தப்பிப்பது, ஹீரோ அனைவரையும் அடித்து வீழ்த்துவது என பல மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகளை பஞ்சமில்லாமல் வைத்துள்ளார் அருண் மாதேஷ்வரன். சுதந்திரத்திற்கு முந்தையை இந்தியா, பிரிட்டிஷ் என சில பிளேவர்களை தூவி உள்ளார்.

இதையும் படியுங்கள்:
கணவரை unfollow செய்த நயன்தாரா.. திரையுலகில் அதிர்ச்சி!
Captain Miller

சிவராஜ் குமார் - தனுஷ் நடிக்கும் காட்சி இந்தியர்களை சுட்டு கொல்லும் காட்சி போன்ற சில காட்சிகள் நன்றாக படாமக்க பட்டுள்ளன. ஜி.வி பிரகாஷ் பழங்குடியினர் இசையை பல இடங்களில் பயன்படுத்தியுளளார்.

இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 9 ம் தேதி வெளியானது. ஓடிடியில் இந்தியில் வெளியாகாத காரணத்தால் இந்தி பேசும் ரசிகர்கள் கேப்டன் மில்லரை ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, கேப்டன் மில்லர் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 8 ம் தேதி (மார்ச் 8) கேப்டன் மில்லரின் இந்திப் பதிப்பு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com