கணவரை unfollow செய்த நயன்தாரா.. திரையுலகில் அதிர்ச்சி!

கணவரை unfollow செய்த நயன்தாரா.. திரையுலகில் அதிர்ச்சி!

நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனை திடீரென இன்ஸ்டாகிராமில் UnFollow செய்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா கடந்த 2022ஆம் ஆண்டு காதல் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். பல சர்ச்சைகளை தாண்டி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்ட இவர்கள் திருமணமான 5 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு பெற்றோரானர். தொடர்ந்து குழந்தைகளுக்கு உயிர் உலக் என பெயர் சூட்டினர். இதையடுத்தும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து அசத்தினார். இதையடுத்து அன்னப்பூரணி படத்தில் நடித்தார்.

ஜவான் பட புரோமோஷனுக்காக சமூக வலைதளங்களில் எண்ட்ரி கொடுத்த அவர், அவ்வபோது தனது மகன்கள், கணவர் புகைப்படத்தை பகிர்ந்து வந்தார். மேலும் தனது படம் குறித்த அறிவிப்புகளையும் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில், திடீரென கணவர் விக்னேஷ் சிவனை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் unfollow செய்திருப்பது பேசும் பொருளாகியுள்ளது.

Actress Nayanthara
Actress Nayanthara
இதையும் படியுங்கள்:
கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் தனுஷ் மகன்... என்ன படம் தெரியுமா?
கணவரை unfollow செய்த நயன்தாரா.. திரையுலகில் அதிர்ச்சி!

மேலும் அவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், ஷேர் செய்துள்ள பதிவில், “எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்” என்கிற கேப்ஷனும் இடம்பெற்று உள்ளது. ஏற்கனவே இருவரும் பிரிய போகிறார்கள் என்று பேசப்பட்டு வரும் நிலையில், திடீரென இந்த பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com