"எட்டூரு எல்லை தாண்டி கோரனாறு" சிலிர்க்க வைக்கும் கேப்டன் மில்லர் பாடல்.. டாப் ட்ரெண்டிங்கில் தனுஷ்!

CaptainMillerPreReleaseEvent
CaptainMillerPreReleaseEvent
Updated on

னுஷின் கேப்டன் மில்லர் படத்தின் மூன்றாவது சிங்கிளான கோரனாறு பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படம் தான் கேப்டன் மில்லர். இந்த படத்தில் நடிகர் தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். பல சர்ச்சைகளை தாண்டி உருவாகும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.

இந்த பாடலில் தனுஷும், சிவராஜும் அட்டகாசமாக நடனமாடுகின்றனர். பம்பை சத்தம், தவில் சத்தம் என கேட்போரை மெய்சிலிர்க்க செய்கிறது கோரனாறு பாடல். உமா தேவி எழுதியுள்ள இந்த பாடலை தேனிசைத் தென்றல் தேவா, சந்தோஷ் ஹரிஹரன், அலெக்சாண்டர் பாபு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகு என கூறப்பட்ட நிலையில், கோரனாறு பாடல் யூடியூப்பில் டாப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com