கோட் படத்தில் விஜயகாந்த்? லீக்கான தகவல்..!

விஜயகாந்த் - விஜய்
விஜயகாந்த் - விஜய்
Updated on

கோட் படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் மூலம் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது.

இந்த படத்தில், லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பது தான் ஹைல்டைட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரட்டை விஜய்யின் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார்.

தி கோட் திரைப்படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தப் படம் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக பொங்கல், தீபாவளி, விஜய்யின் பிறந்தநாள் என விஜய் படங்கள் ரிலீசாகும் என்பதால் ஜூன் 22 பிறந்தநாளையொட்டி ஜூன் மாதம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தற்போது இந்த படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவரின் கேரக்டரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி இருப்பதாகவும், விஜய்யும் அவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளும் படத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக கேப்டன் விஜயாகந்தின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி தான் படக்குழு இதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com