சந்திரலேகா (1948): The First Pan Indian Tamil Movie! இரண்டு கோடி வருவாய்... தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்டம்!

Chandralekha 1948
Chandralekha 1948
Published on

இன்றைய காலத்தில் சினிமா என்பது அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறி இருக்கின்றது. சிறிய தொழில்நுட்பங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சினிமா தற்போது பல புதுமையான தொழில்நுட்பங்களைக் கையாண்டும் மிகப்பெரிய பொருட்செலவில் படமாக்கப்பட்டும் வருகிறது. உச்ச நட்சத்திரங்கள் பலர் இணைந்து மக்களுக்கு விருந்தாகத் திரைப்படங்களைத் தருகின்றனர். அதில் தமிழ் சினிமா மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது தனக்கெனத் தனி இடத்தினையும் மதிப்பினையும் பெற்றுள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் புகழை உயர்த்திய ஒரு படம்தான் சந்திரலேகா.

தமிழ் சினிமாவின் ஆரம்பம்:

தமிழ் மொழியில் உருவான முதல் திரைப்படம் ஆக கீசக வதம் 1916 ஆம் ஆண்டு வெளிவந்தது. உங்களில் யாருக்காவது தெரியுமா, தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமே மௌன திரைப்படம் என்று? ஆம், கீசக வதம் தமிழில் வெளிவந்த முதல் திரைப்படம் மற்றும் முதல் மௌன திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. இது எத்தனை பேருக்குத் தெரியும் என்பதை கமெண்ட் செய்யவும்.

பின் தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் காளிதாஸ் 1931 ஆகும். அதன் பின் பல திரைப்படங்கள் புராணக் கதைகள், சமூகக் கதைகள், சாகசக் கதைகளைக் கொண்டு வெளியாகின.

சந்திரலேகா என்னும் பிரம்மாண்டம்:

எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த சந்திரலேகா சுமார் ஐந்து ஆண்டு காலம் ஆக, 1943 முதல் 1948 வரை படமாக்கப்பட்டது. திரைப்படத்தின் பொருட்செலவு அப்பொழுதே சுமார் 30 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், இத்திரைப்படமே அக்காலத்தில் வெளிவந்த பெரிய பட்ஜெட், பிரம்மாண்ட திரைப்படம் என எல்லோராலும் பேசப்பட்டது. பெரும் சாகசம், அரண்மனை சதிகள், காதல், நடனம், இசை என அனைத்து அம்சங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் சந்திரலேகா.

சிறப்பு :

  • இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கேமரா கோணங்கள், காட்சித் தொகுப்பு, வெளிச்சம் போன்றவை புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்டு கையாளப்பட்டன.

  • படத்தில் இடம்பெற்றுள்ள டிரம் டான்ஸ் 100க்கும் மேற்பட்ட தாளங்களைப் பயன்படுத்தி நானூறுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களைப் பங்கேற்க வைத்து எடுக்கப்பட்ட நடனக் காட்சி ஆகும். இதற்காக ஆறு மாத காலம் நடனக் கலைஞர்கள் பயிற்சி எடுத்தனர் எனப் பார்க்கப்படுகிறது. இந்த நடனக் காட்சி சர்வதேச அளவில் ஒரு பிரமிப்பை உருவாக்கியது. பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

இதையும் படியுங்கள்:
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்கு 'வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' விருது..!
Chandralekha 1948
  • கலை இயக்குநர் ஏ.கே.சேகர் அவர்கள் அவ்வளவு நேர்த்தியாக அந்த ட்ரம் நடனக் காட்சியினை செட் செய்திருப்பார்.

  • அது மட்டுமல்லாமல் அரண்மனை, சிறைச்சாலை, போர்க்களம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க பாராட்டுகளைப் பெற்றன.

  • அதிகாரம், பேராசை, போர் இவையெல்லாம் சமுதாயத்தை அழிக்கக்கூடியவை என்பதைக் கதைமுழுவதும் படம் உணர்த்துகிறது. சகோதரர்களுக்குள் அதிகாரத்துக்கான பேராசை எப்படி ரத்தப்போர்களை உருவாக்குகிறது என்பதையும், அதே நேரத்தில் அன்பும், கலையும், நீதியும் ஒருங்கிணைந்தால் சமாதானம் ஏற்படும் என்பதையும் படம் வலியுறுத்துகிறது.

  • படத்தின் வருவாய் இரண்டு கோடி என 1998 இல் இந்திய சினிமா புத்தகம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
விஜயகாந்த் பேசிய பஞ்ச் வசனங்கள், படங்கள்!
Chandralekha 1948

தமிழில் வெளியாகி இந்தியில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் இந்தியில் பெரும் வெற்றியினைப் பதிவு செய்தது. மேலும், ஆங்கிலம், ஜப்பானியஸ் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இத்தனை சாதனைகளைப் பெற்று சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா படமாக பலராலும் அழைக்கப்படுகிறது.

இயக்குனர் - எஸ்.எஸ்.வாசன்

நடிகர்கள் - எம்.கண்ணாம்பாள், டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், ஆர்.ஜே.மனோகரன் மற்றும் பலர்

இசை - எஸ்.ராமநாதன் (எஸ்.ராஜேஸ்வர ராவ்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com