சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா எப்போது? ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்!

சந்திரமுகி 2
சந்திரமுகி 2Intel
Updated on

சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் சந்திரமுகிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து தான் வருகிறார்கள்.

அவ்வபோது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சந்திரமுகி படத்தை பார்க்க ரசிகர்கள் இன்றும் ஆர்வமாக உள்ளனர். ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு என டாப் நடிகர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து நடித்து பட்டைய கிளப்பியிருப்பார்கள். இந்த படத்தின் 2ஆம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டுவந்தனர்.

இவர்களின் ஆசைக்கேற்ப இயக்குனர் பி.வாசு 2ஆம் பாகம் எடுக்க முடிவெடுத்தார். அதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.

அதேபோல் முதல் பாகத்தில் நடித்த நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. அதற்குப் பிறகு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் சில மாதங்களாக அந்த படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

அதனை தொடந்து கடந்த மே மாதம் முதல் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான இறுதி கட்டப்பட படிப்பை தொடங்கினர் படக்குழு. அதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இவர்களை தவிர லட்சுமிமேனன் கங்கனா ரனவத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட தயாரிப்பு நிறுவனமான லைக்கா திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சந்திரமுகி - 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com