சென்னை வெள்ள பாதிப்பு: நிதி உதவி செய்த ஹரிஷ் கல்யாண்!

Harish Kalyan
Harish Kalyan
Published on

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்த பார்க்கிங் பட கதாநாயகன் ஹரிஷ் கல்யாண்.

சென்னையில் 48 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜம் புயலின் காரணமாக ஏற்பட்ட மழை நின்று 48 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் சில பகுதிகளில் தேங்கிய மழைநீர்கள் வடியவில்லை. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர். மேலும் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதற்கு கூட வழியில்லாமல் மக்கள் இன்னலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதே சமயம் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் தொடர்ச்சியான மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் தண்ணீர் வடியாத பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் வாழ்க்கை பாதிப்பை சந்தித்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சென்னையை புரட்டி எடுத்த மிக்ஜாம்... தாமாக முன்வந்து நிவாரண தொகை அறிவித்த நடிகர்கள்!
Harish Kalyan

வரலாறு காணாத அளவில் கொட்டி தீர்த்த மழையால் ஏற்பட்டிருக்கக் கூடிய சேதத்தை சமாளிக்க 5500 கோடி ரூபாய் நிதி வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். மேலும் நடிகர் சூர்யா, கார்த்திக் இருவரும் 10 லட்சம் ரூபாய் நன்கொடையை முதல் ஆளாக அளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com