நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை விதிப்பு... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி!

Sv sekar
Sv sekar
Published on

சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்தது நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவினர், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 2019 ஆம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது. விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயவேல், புகார் குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளதாக கூறி, நடிகர் எஸ்.வி.சேகர்க்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படியுங்கள்:
இயக்குனர் ஷங்கர் வீட்டில் மீண்டும் நடந்த விஷேசம்!
Sv sekar

இதனையடுத்து, அபராத தொகையை செலுத்திய எஸ்.வி.சேகர், தண்டனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்று கொண்ட நீதிபதி, தண்டனை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com