இயக்குனர் ஷங்கர் வீட்டில் மீண்டும் நடந்த விஷேசம்!

அதிதி ஷங்கர் - ஐஸ்வர்யா
அதிதி ஷங்கர் - ஐஸ்வர்யா

இயக்குநர் ஷங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் ஆறு மாதங்கள் கூட கணவருடன் அவர் வாழவில்லை என்றும் சில பிரச்சினைகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் ஐஸ்வர்யாவின் முதல் கணவர் ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், அதனால் தான் இருவரும் பிரிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்று அவரது சகோதரி அதிதி ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஜோராக நடந்த விஜயக்குமாரின் பேத்தி திருமணம்... திரைபிரபலங்கள் நேரில் வாழ்த்து!
அதிதி ஷங்கர் - ஐஸ்வர்யா

ஐஸ்வர்யாவின் வருங்கால கணவர் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் ஐஸ்வர்யா இருக்கும் புகைப்படத்தையும் அதிதி ஷங்கர் பகிர்ந்துள்ளார். திருமண நாள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், விரைவில் கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த அதிதி ஷங்கர். உலகத்தில் எனக்கு பிடித்த 2 பேர் என அவரது சகோதரன், சகோதரியை குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com