ஞாபகம் வருதே... ரீ ரிலீஸாகும் ஆட்டோகிராப்..!

autograph
autograph
Published on

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஆன ஆட்டோகிராப் படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விஜய், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திர நடிகர்களின் படம் மட்டும் தான் அதிக வெற்றியை பெற்று வருகிறது. இதையடுத்து, கதை நன்றாக இருந்தால் படம் வரவேற்கப்படுகிறது. இந்த சூழலில் சமீபகாலமாகவே ரீ ரிலீஸ் கலாச்சாரம் ட்ரெண்டாகி வருகிறது. பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து வசூல் சாதனை படைத்து வருகின்றனர். அப்படி கில்லி, பில்லா உள்ளிட்ட பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு புதிய வரலாற்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் தற்போது நடிகர் சேரனின் ஆட்டோகிராப் திரைப்படமும் இணைந்துள்ளது.

சேரனோட எழுத்துலயும், டைரக்‌ஷன்லயும் 2004-ல வந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஆட்டோகிராஃப். இந்த கிளாசிக் ஹிட் திரைப்படம் தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக ரெடியாக உள்ளது. வித்தியாசமான காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவான இதில் ஹீரோவாக செந்தில் குமார் என்கிற கேரக்டரில் இயக்குனர் சேரனே நடித்திருந்தார். இப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலிலும் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி நிறைய விருதுகளையும் வென்று குவித்தது.

இதையும் படியுங்கள்:
நடுத்தர மக்கள் கொண்டாடிய குடும்பஸ்தன்... ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!
autograph

இந்நிலையில், இப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்த அப்டேட்டை புது ட்ரெய்லரோட அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். டொவினோ தாமஸ், ஆர். பார்த்திபன், லோகேஷ் கனகராஜ், பிரசன்னா, சினேகா, சசிகுமார், பாண்டிராஜ், சமுத்திரக்கனி, பா. ரஞ்சித், ஆரி அர்ஜுனன், சிம்புதேவன், விஜய் மில்டன் என திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் அவர்களின் சோஷியல் மீடியா பக்கத்தில் ஆட்டோகிராஃப் படத்தின் புது ட்ரெய்லர ஷேர் செய்து ரீ-ரிலீஸ் பற்றி அறிவித்துள்ளனர்.

ட்ரீம் தியேட்டர்ஸ் பேனரில் சேரனே இயக்கி தயாரித்த இப்படம் பார்க்கும் போது ஒவ்வொருவரின் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவ காதலை நினைவுகூற செய்தது. ஆத்மார்த்தமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் முதன்முதலில் நடிகர் விஜய்யை தான் நடிக்க வைப்பதாக இருந்தாராம் சேரன். பின்னர் அவர் ரிஜெக்ட் செய்ததால், வேறு சில ஹீரோக்களிடமும் கதையை கூறி இருக்கிறார். யாரும் செவி சாய்க்காததால் தான் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்து அதில் வெற்றியும் கண்டார் சேரன்.

படம் ரிலீஸ் ஆகி 21 ஆண்டுகள் ஆகும் நிலையில், விரைவில் அதை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். அதற்காக ஏஐ தொழில்நுட்பம் உதவியுடம் வெளிநாட்டில் இருந்தபடி தன்னுடைய காதலிகளை சேரன் நினைவுகூறும் படியான வித்தியாசமான டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com