

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சேரன் , இவர் இயக்குனர் மட்டுமல்ல சில காலம் நடிகராகவும் தமிழ் சினிமாவில் பெயர் பெற்றவர். தமிழ் சினிமாவில் யதார்த்தமான கதைக்களத்துடன் புரட்சிகரமான சிந்தனைகளுடன் , சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திரைப்படங்களை அவர் இயக்கி உள்ளார்.
சேரனின் தாயார் கமலா பாண்டியன் இன்று இயற்கை எய்தி உள்ளதாக , தமிழ் திரை உலகின் மிகப் பிரபலமான மக்கள் தொடர்பாளராக உள்ள, நிகில் முருகன் இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இயக்குனர் சேரன் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் காராம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர்.
இவரது தந்தை தியேட்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர். இதனால் சேரனின் இளமைப் பருவம் பெரும்பாலும் தியேட்டர்களில் கழிந்துள்ளது. சினிமா மீது பெரிதும் ஈர்ப்புக் கொண்ட சேரன் சென்னை வந்து தொடர்ச்சியாக வாய்ப்பினை தேடி இயக்குனராக உயர்ந்தார்.
சேரன் முதன் முதலில் பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பொற்காலம், தேசிய கீதம் ,வெற்றி கொடி கட்டு போன்ற பல வெற்றி திரைப்படங்கள் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இயக்குனராக வெற்றி பெற்ற பின்னர் ஆட்டோகிராப் என்ற திரைப்படத்தை இயக்கி அவரை கதாநாயகனாக நடிக்கவும் செய்தார். அந்த திரைப்படம் அந்த காலத்தில் பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக மாறியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் சேரன் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழக அரசின் விருதுகளையும், ஃபிலிம் பேர் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
இன்று மதியம் செய்தி தொடர்பாளர் நிகில் முருகன் பகிர்ந்த செய்தி படி மேலூர், பழையூர்பட்டியைச் சேர்ந்த இயக்குனர் சேரன் அவர்களின் அன்புத் தாயார் திருமதி. கமலா பாண்டியன் (84) அவர்கள் இயற்கை எய்தினார் என்பதைத் மிகுந்த மாணவரித்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதிச் சடங்குகள் நாளை அவருடைய சொந்த ஊரான மேலூர், பழையூர்பட்டியில் நடைபெறும்.
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலவிரும்பிகள் அனைவரும் வருகை தந்து அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி:
1/10, பழையூர்பட்டி,
கொட்டநாதம்பட்டி,
அம்பலகாரன்பட்டி, மேலூர்.
என்று நிகில் முருகனின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.