ஜென்டில்மேன்-2 ஹீரோவாக சேத்தன்! 

சேத்தன்
சேத்தன்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ஜென்டில்மேன்-2 படத்தின் ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்பது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் - தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் சேத்தன் சீனு இப்படத்தில் ஹீரோ ஆகிறார்.  

-இதுகுறித்து சேத்தன் சீனு தெரிவித்ததாவது: 

ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. நான் குஞ்சு மோன் சாரை சந்தித்த வேளையில், நடித்து வரும் மற்றொரு படத்தின் படப்பிடிப்பிற்காக பெரிய தாடி வளர்த்து இருந்தேன். ஆனால் தாடி ட்ரிம் செய்து ஆடிஷனுக்கு வர சொன்னார்.

நானும் அப்படியே செய்தேன். இன்று நான்தான் ஜென்டில்மேன்-2 படத்தின் ஹீரோ என்ற அறிவிப்பை கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன். இந்தப் படத்துக்காக தாடி மட்டுமல்ல மொட்டை அடிக்கச் சொன்னால் அதையும் செய்வேன். 

-இவ்வாறு தெரிவித்தார் சேத்தன். 

இந்த படத்தில் ஹீரோயின்களாக நயன்தாரா மற்றும் பிரியா லால் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 

logo
Kalki Online
kalkionline.com