துணை நடிகர் மற்றும் துணை நடிகைதான் ஜுனியர் ஆர்டிஸ்ட். இவர்கள் கதை நம்மை நெகிழச் செய்யும். படாதபாடு படுபவர்கள்.
ஆண் - பெண் என எல்லா இளைஞர்களுக்கும் சினிமாதான் இலக்கு. பலர் ஊர் விட்டு ஊர் வந்து சினிமா வாய்ப்பிற்காக அலைந்து தோற்றுப்போனவர்கள். வயிற்றுக்குச் சோறு வேண்டுமே..!
அதனால், தங்களை துணை நடிகர் சங்கத்தில் சேர்ந்து விடுகிறார்கள். இவர்கள் சினிமாவில் கதாநாயகன், கதாநாயகி என்று வாய்ப்பு தேடி வந்தவர்கள்.
ஆனால் இவர்களுக்குச் சினிமா தரகர் சினிமாவில் நடனமாட வாய்ப்பு தருகிறார். ஒரு நாளைக்கு ₹500 கிடைக்கும்.
இதில் தரகர் ₹100ஐ பிடுங்கிவிடுவார். அவரை எதிர்க்க யாரும் இல்லை. கேள்வி கேட்டால் வயிற்று பிழைப்பு அம்பேல்தான்.
நாயகன், நாயகி… இவர்களைச் சுற்றி நடனம் ஆடுவது இவர்கள்தான். பலரது முகம்கூட திரையில் தெரியாது. டான்ஸ் மாஸ்டர் சொல்லும் அசைவுகளை உள்வாங்கி தவறு இல்லாமல் ஆட வேண்டும்.
புதிதாக டான்ஸ் மாஸ்டர் ஆக வேண்டும் என்றால்… நடன மாஸ்டர் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
எவ்வளவு நன்றாக நடனம் ஆடினாலும் திரைப்படத்திற்கு டான்ஸ் மாஸ்டர் சங்க உறுப்பினர் மட்டுமே டான்ஸ் மாஸ்டர் ஆக முடியும்.
பெயரில் மட்டுமே ஜுனியர் ஆர்ட்டிஸ்ட். உண்மையில் அவர்கள் ஊறுகாய் போலத்தான்.
தனது வீடு, குடும்பம் என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு சினிமா மோகத்தால் வந்து மிகவும் கஷ்டப்பட்டு காலம் ஒட்டுகின்றனர்.
கோடம்பாக்கம் சுற்றி வந்தாலும் வாய்ப்பு கிடைக்காது. ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் மட்டும் அல்ல; திரைக்கதை, வசனம் எழுதும் எழுத்தாளர்களும் இதே மாதிரிதான் பரிதவிக்கிறீர்கள். போட்டோகிராபர், கஸ்ட்யூம் டிசைனர், மேக்-அப் மேன், மெஸ்… என்று பல்வேறு நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். எல்லோருக்கும் நல்ல ஊதியம் கொடுக்க வேண்டும்.
சினிமா என்பது கனவு தொழிற்சாலைதான். இங்கு கானல் நீர் மட்டுமே தெரியும். அதேபோல் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றமால் இயக்குனர் ஆக முடியாது.
மணிரத்னம் இதற்கு விதிவிலக்கு. ஆனால், அவருக்கு அண்ணன் மூலம்… சினிமா பின்புலம் இருந்தது.
தான் இயக்குனராக முடியும் என்று சொல்லும் எழுத்தாளருக்கு கிடைக்கும் பதில்…
“பிறகு பார்ப்போம்…!“
சினிமா துறையில் முன்னேற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. இதனால் சினிமா வாய்ப்பு தேடி வருபவர்கள் சட்ட விரோதமாக ஏதாவது செய்துவிடுவார்கள். பெண் என்றால் விபச்சாரம் செய்வார்.
நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கும்போது… ஏன் துணை நடிகர்களுக்கு தாராளமாகக் கொடுக்கக்கூடாது..?
தயாரிப்பாளர் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பார்கள்.
இது மட்டுமே இல்லை. சினிமாவில் சம்பந்தப்பட்ட பல்வேறு தொழிலாளிகளுக்கும் இதே நிலைதான்.
போட்டோகிராபர், கஸ்ட்யூம் டிசைனர், மேக்-அப் மேன், மெஸ்… என்று பல்வேறு நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். எல்லோருக்கும் நல்ல ஊதியம் கொடுக்க வேண்டும்.
வெறும் நாயகன் மற்றும் நாயகிக்கு மட்டுமே பல கோடிக்கணக்கில் கொடுப்பது என்ன நியாயம்..?
சினிமா ஒரு கலை. இது இன்று கோடீஸ்வரர்களிடமே உள்ளது. இது மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் மாற்றம் தேவை. மக்களுக்காக கதைகள் எழுத வேண்டும்.
எல்லாத் துறைகளிலும் நியாயம் இருக்க வேண்டும். சினிமா என்றாலே தில்லுமுல்லுதான். உண்மைக்கு இங்கே இடம் இல்லை. மனிதனை மனிதனாக மதிப்பது கிடையாது.
இறுதியாக ஒன்று. இளைஞர்கள் சினிமா ஆசையுடன் கோடம்பாக்கம் வருவதை நிறுத்திவிட்டு நல்ல வேலைக்குச் செல்லுங்கள். அப்போதுதான் தயாரிப்பாளர் மனிதனை மனிதனாக பாவித்து உதவி செய்வார்கள்.
‘சினிமா ஒரு மாயை…!’