பொங்கல் பண்டிகை: திரைப்பிரபலங்கள் கொண்டாட்டம்!

Dhanush Pongal celebration
Dhanush Pongal celebration

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைபிரபலங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை தங்களது சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழர் திருநாள் என்று சொல்லக்கூடிய பொங்கல் திருநாளை தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். சூரியன் முன்பு பொங்கல் வைத்து அதை படைத்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பதே பொங்கல் பண்டிகையாகும்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் வாசலில் திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதே போன்று நடிகர் தனுஷும் தனது தாய், தந்தை, மகன்களுடன் பொங்கல் கொண்டாடினர். இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடினர். இவரின் குடும்பத்தில் புது உறுப்பினராக ஏலியன் இணைந்துள்ளது. அயலான் படம் வெளியான நிலையில், ஏலியன் உடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை போயர்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி காந்த், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென இந்த நன்நாளில் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும் எனக் கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com