ஒளிக் கலைஞன் P.C ஸ்ரீ ராம் பிறந்தநாள் இன்று!

p c sriram photography
p c sriram photography
Published on

னக்கு பிடித்த அபிமான ஹீரோக்கள் பெயர் டைட்டிலில் வரும் போது ரசிகர்கள் கை தட்டுவார்கள். பிடித்த டைரக்டர்கள், மியூசிக் டைரக்டர்கள் பெயர் திரையில் வந்தாலும் கை தட்டுவார்கள். ஆனால் முதல் முதலாக ஒரு ஒளிப்பதிவாளர் பெயர் திரையில் வரும் போது கை தட்டினார்கள் என்றால் இது P. C ஸ்ரீ ராம் அவர்களுக்குதான் இருக்கும்.

இந்தியாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளராக வலம் வரும் P. C. ஸ்ரீராம் அவர்களின் பிறந்தநாள் இன்று ஜனவரி 26.                            தனது தாத்தா அவர்கள் பரிசளித்த கேமராவை வைத்து ஒன்பது வயதிலேயே தான் பார்க்கும் பொருள்கள், பறவைகள்,போஸ்டர்கள் என பலவற்றை படம் பிடித்தார் ஸ்ரீ ராம்.1976 ல் அடையாரில் உள்ள திரைப்பட கல்லூரியில் சேர்ந்து ஒளிப்பதிவு பயின்றார்.1982 ல் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார். ஒரு ஒளிப்திவாளருக்கு எத்தனை திறமை இருந்தாலும் திறமைகள் வெளிப்பட சிறந்த இயக்குநர் தேவை.

p c sriram photography
p c sriram photography

பல்வேறு மாற்று சிந்தனை கதைகளுடன், தனது கருத்தை சரியாக படம் பிடிக்க தேடலுடன் இருந்த மணி ரத்னத்திற்கு P. C ஸ்ரீராம் ஒரு வரப் பிரசாதமாக கிடைத்தார்.1986 ல் மணிரத்னம் இயக்கத்தில் ஸ்ரீ ராம் ஒளிப்பதிவு செய்த  மௌன ராகம் திரைப்படம் சினிமாவில் அதுவரை பேசாத காதலை பேசி வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு  1987 ல் மணிரத்னம் இயக்கத்தில்  கமல் நடிப்பில்  வெளியான நாயகனில்  ஸ்ரீராமின் ஒளிப் பதிவும், தோட்டா தரணியின் கலையும் இணைந்து உலக சினிமா தரத்திற்கு உயர்த்தியது. 

இன்று வரை பலரால் விரும்பி பார்க்கப்படும் படமாகவும் உள்ளது.1988 ல் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் கோணத்திலும், ஒளியிலும் புதுமைகளை செய்தார் P. C ஸ்ரீராம்.இப்படத்திற்கு இவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் பல்வேறு இயக்குநர்களிடம் இணைந்து  ஒளிப்பதிவ செய்தார் ஸ்ரீ ராம் இருப்பினும் PC ஸ்ரீராம் என்றாலே ஸ்டைலிஷ்ஷாக படம் பிடிப்பவர் என்ற கருத்து இருந்தது.

மேலும் இவர் படம் என்றாலே இருட்டில் தான் காட்சிகள் இருக்கும் என்று சில பத்திரிகைகள் துணுக்குகள்  எழுதின.. இதை பொய்யாக்கும் விதத்தில் 1992 ல் பரதன் இயக்கத்தில் சிவாஜி, கமல் நடித்த தேவர் மகன் படத்தில் ரத்தமும், சதையுமாக தென் மாவட்ட ஒரு வாழ்வியலை ஒளிப்பதிவு செய்தார் P. C. சிவாஜியின் மிக நுண்ணிய உணர்வுகளை மிக சிறப்பாக காட்டியிருப்பார்.        1993 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் மீரா என்ற படத்தை இயக்கினார் ஸ்ரீராம். பாடல்கள் ரீச் ஆன அளவுக்கு படம் ரீச் ஆகவில்லை.1995 ஆம் ஆண்டு கமலை வைத்து குருதிப் புனல் படத்தை தந்தார். வன்முறை காட்சிகள் அதிகம் இருந்தாலும் மேக்கிங்கிற்க்காக ஆஸ்கார் கதவுகளை தட்டியது இப்படம்.

எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலை மைய்யப்படுத்தி வானம் வசப்படும் என்ற படத்தை 2004 ஆம் ஆண்டு இயக்கினார் ஸ்ரீ ராம்.  பேயை காட்டாமல் தனது ஒளிப்பதிவு மூலம் பயத்தை 2009 ஆம் ஆண்டில் வெளிவந்த யாவரும் நலம் படத்தில் காட்டியிருப்பார் PC.  விக்ரம் குமார் இப்படத்தை இயக்கி இருந்தார்.இப்படத்தில் பல காட்சிகளில் பயந்து கத்தியவர்கள் பலர். kv ஆனந்த், குகன், அரவிந்த் கிருஷ்ணா ஜீவா உட்பட பல பிரபலமான ஒளிப்பதிவாளர்கள் நமது ஸ்ரீ ராமின் மாணவர்களே.

இதையும் படியுங்கள்:
ப்ளூ ஸ்டார் விமர்சனம்!
p c sriram photography

தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி என பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் PC ஸ்ரீராம்.சைக்கோ உடப்பட பல படங்கள் இவரது ஒளிப்பதிவில் வர உள்ளன. இந்திய சினிமாவின் அடையாளமாக இருக்கும் பெருமைமிகு தமிழர், PC ஸ்ரீ ராம் அவர்கள் இன்னமும் பல புதுமைகள் செய்ய இந்த பிறந்தநாளில் வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com