கோடிகளில் சம்பளம்... உச்சகட்ட புகழ்! திடீரென மாயமான ஹாலிவுட் Cowboy!

Clint Eastwood
Clint Eastwood
Published on

க்ளின்ட் ஈஸ்ட்வுட் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு பெயர். அறுபதுகளில் ஹாலிவுட்டின் மிக பிரபலமான கௌ பாய் பட நாயகர்களில் ஒருவர் தான் இந்த ஈஸ்ட்வுட். இவரது பாணி உலகம் முழுவதும் இருந்த கௌ பாய் பட ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இப்படி பட்ட கதாநாயகன் அவரது புகழின் உச்சகட்டத்தில் இருந்த போது திடீரென்று காணாமல் போய்விட்டார்.

மூன்று மாதங்கள் எங்கு தேடியும் அவரை பற்றி யாருக்கும் தெரியவில்லை. அவரும் ஹாலிவுட் பக்கமே தலை காட்டவில்லை. அவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருந்த நிலையில் அவர் இப்படி மாயமானது எல்லோருக்கும் ஒரு புதிராக இருந்தது. இவரை விரும்பாத பொறாமைகாரர்கள் இவருக்கு அந்த நோய், இந்த நோய் என்று புரளி வேறு கிளம்பிவிட்டார்கள்.

இப்படி மூன்று மாதங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் கிளின்ட் ஈஸ்ட்வுட் ஓசைப்படாமல் எப்படி போனாரோ அப்படியே ஹாலிவுட் திரும்பினார். எல்லோரும் அவரை சூழ்ந்து கொண்டு "என்ன ஆயிற்று..? எங்கே போனீர்கள் இவ்வளவு நாட்கள்..? என்று கேட்டார்கள். "இதனால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டீர்களே..!" என்று புலம்பினார்கள்.

இதையும் படியுங்கள்:
ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுத்த தமிழ் படம்! உலக அளவில் 6-வது இடத்தைப் பிடித்த தமிழ் படம்..!
Clint Eastwood

இந்த கேள்விகளுக்கு கிளின்ட் ஈஸ்ட்வுட் தந்த பதில்: "என்னுடைய தொண்ணூற்றாறு வயது தாயாருக்கு ஞாபக மறதி நோய். அவரை என் பண்ணை வீட்டில் வைத்து நன்றாக பார்த்துக் கொள்ளவே நடிப்பதை விட்டு விலகி இருந்தேன். போன வாரம் அவர் இறந்து விட்டார். நான் என் தாயாருக்கு பட்டிருக்கும் கடன் இவ்வளவு அவ்வளவில்லை. உலகத்தில் எதுவும் நான் அவருக்கு பட்டிருக்கும் கடமையை விட பெரிதில்லை. நோய்வாய் பட்டிருக்கும் தாயாரை நன்றாக அருகிலிருந்து பார்த்துக் கொள்ள அவர் இழந்த வருமானம் பல மில்லியன் டாலர்கள். க்ளின்ட் ஈஸ்டவுடுக்கு இப்போது வயது 95. தனது ஆடம்பர வாழ்க்கையை கைவிட்டு எளிமையாக வாழ்ந்து வருகிறார். தன் சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று தான தர்மம் செய்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com