ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுத்த தமிழ் படம்! உலக அளவில் 6-வது இடத்தைப் பிடித்த தமிழ் படம்..!

Tourist Family
Tourist Family
Published on

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் லெட்டர்பாக்ஸ்ட்(Letterboxd) உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள், சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளம் இது. இந்த தளத்தில் பயனர்களின் மதிப்பீடுகள், விமர்சனங்கள், பார்வை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் வெளியிடும். இந்த தளம் சர்வதேச அளவில் பெரும் நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது. அந்த வகையில் பொழுதுபோக்கு படப் பிரிவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் இடம் பிடித்துள்ளது.

உலகளாவிய அளவில் வெளியாகி உள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. Highest Rated Comedy Films of 2025 தரவரிசை பட்டியலில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் டாப் 10 பட்டியலில் 6ஆம் இடத்தை பிடித்துள்ளது.அபிஷன் ஜீவிந்​த் இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் சசிகு​மார், சிம்ரன், எம்​.எஸ்​.​பாஸ்​கர் உள்பட பலர்​ நடித்​துள்​ளனர்​. முதல் இடத்தை Sinners திரைப்படம் பிடித்துள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இது அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடித்த, இலங்கைப் பின்னணியில் மனிதநேயம் பேசும் தமிழ் திரைப்படம்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: MSVPG - மன சங்கர வரப் பிரசாத் காரு!
Tourist Family

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு புதிய தொடக்கத்தைத் தேடி வரும் ஒரு தமிழ் அகதி குடும்பம், சென்னையின் அண்டை வீட்டாருடன் இணைந்து ஒரு vibrant சமூகத்தை உருவாக்குவதே படத்தின் கரு. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. சுமார் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, உலக அளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இலங்கை மக்களின் வலியை அவர்களின் வாழ்வினை, குடும்பத்தோடு அனைவரும் ரசிக்கும் வகையில் காமெடி கமர்சியல் கலவையுடன் சொல்லி இருப்பதே இப்படத்தின் பெரிய பலமாக விமர்சகர்கள் கொண்டாடுகின்றனர். வலுவான கதை அமைப்பு, எளிமையான அதே சமயம் தாக்கமுள்ள திரைக்கதை, மனிதநேய உணர்வுகள் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்றைப் பெற்றது.

டூரிஸ்ட் ஃபேமிலி படம் பிரபல ஓடிடி தளமான ஜியோ ஹாட் ஸ்டாரில் ஜூன் மாதம் 2ஆம் தேதி வெளியானது. உலக அளவில் மிகப்பெரிய ஹாலிவுட் படங்கள் இருக்கும் இடத்தில் டாப் டென்னில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவந்த் என்பதும், அவருக்கு குவியும் பாராட்டுகள் அவரை எதிர்கால தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சர்வதேச அங்கீகாரம் படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் என்றும் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: வா வாத்தியார்!
Tourist Family

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com