சொர்க்கத்திலும் கேட்கட்டும் உன்சிரிப்புச் சத்தம்!
சிரிப்பு நடிகர்கர்கள்
சிலரின் மத்தியில்…
நடிக்காமலேயே ரசிகர்களைச்
சிரிக்க வைத்த
சிறப்பு நடிகன் நீ!
கிருஷ்ண மூர்த்தியாய்
இருந்த உனக்கு…
மதன்பாப் என்ற
மகத்தான பெயரை
ஈட்டிக் கொடுத்தது
இணையற்ற உன்சிரிப்பே!
எழுபத்தொன்று என்பது
இறக்கும் வயதில்லைதான்!
அதற்குள்ளே நீ…
ஒருநூறு படங்களில்
காமெடியில் குணச்சித்திரத்தில்
கலக்கியே விட்டாய்!
கலக்கப்போவது யாரு?
என்ற நிகழ்ச்சிக்கும்
இருந்தாய் நடுவராய்!
பங்கேற்றவர்கள் பலவாறாய்முயன்று
ரசிகர்கள் எங்களை
சிரித்திடச் செய்வர்!
நீயோ எளிதாய்…
உந்தன்சிரிப்பால் மட்டுமே
அவர்கள் அனைவரையும்
ஓவர்டேக் செய்வாய்!
சிரித்தே எங்களைச்
சிரிக்கச் செய்தவனே!
உந்தன் சிரிப்பை
உலகம் என்றுமே
நினைவில் வைத்து
நிம்மதி அடையும்!
ஆனாலும் உன்மரணம்
ஆறா வடுவாய்
எங்கள் ஆழ்மனங்களில்
நின்றே விட்டதை
நிச்சயம் உலகறியும்!
சொர்க்கத்திலும் உன்சிரிப்புச்சத்தம்
உரக்கக் கேட்கட்டும்!
கலக்கப்போவது உன்னையன்றி
வேறுஎவரும் உண்டோ?