எம்.எஸ்.பாஸ்கர் பேச்சால் வெடித்த சர்ச்சை… கொந்தளித்த சினிமா ரசிகர்கள்!

M.S.baskar
M.S.baskar

விதார்த் நடிப்பில் உருவான லாந்தர் படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எம்.எஸ்.பாஸ்கர், படம் பார்க்க செலவிடும் 120 ரூபாயில் மாளிகை கட்டிவிடப்போவதில்லை என்று பேசிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால், கொந்தளித்த சினிமா ரசிகர்கள், தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

உலகளவில் சினிமா என்பது ஒரு அடிப்படை தேவையான ஒன்றாக மாறி வருகிறது. ஒருவரின் மன கஷ்டங்களுக்கு தீர்வாகவும், சந்தோஷத்தின் சாவியாகவும் சினிமா இருந்து வருகிறது. சினிமாவிற்கு உயிரைக் கொடுக்கும் ஆட்கள் ஏராளம். ஒருவரின் மனநிலையை அடியோடு மாற்றும் சினிமாவை எப்படி பொழுதுபோக்கு அம்சத்தில் சேர்க்க முடியும். கூறுங்கள்!

பார்ப்பவர்களை நல்வழிப்படுத்தும் படங்களை, எடுப்பவர்களுக்கு எவ்வளவு பெரிய பொறுப்புள்ளது?

அந்தவகையில், லாந்தர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய எம்.எஸ்.பாஸ்கரின் கருத்துக்கள் சினிமா ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. 'நான் பொதுமக்களுக்கு சொல்வது ஒன்றுதான். உங்களுக்கு படம் பிடித்தால் நாலு பேரிடம் சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் அதை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள்.

படம் பார்க்க போறவர்களிடம், அந்தப் படம் நல்லா இல்லை பார்க்க போகாதீர்கள் என்று கூறாதீர்கள். ஒரு படம் எடுப்பதில் எத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறது. எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு எத்தனையோ பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இது மாதிரி பல கஷ்டங்கள் உள்ளன.

அதுபோல எடுக்கப்படும் படங்களை செல்ஃபோன் கையில் இருக்கும் ஒரே காரணத்தினால், தியேட்டரில் உட்கார்ந்து கொண்டு படம் மொக்க என பதிவிடுகிறார்கள். தயவு செய்து இந்தப்படத்துக்கு வந்துவிடாதீர்கள் என்று சொல்லாதீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருங்கள். எல்லோரும் பார்க்கட்டும்.

படங்களை பார்க்க செலவளிக்கும் 120, 200 ரூபாயில் மாட மாளிகைகள், கோபுரங்கள் கட்டிவிடப் போவதில்லை. நல்லா இருக்கும் படத்துக்கும் சரி, நல்லா இல்லாத படத்துக்கும் சரி நிறைய பேர் வந்து பார்த்தால், பல குடும்பங்கள் வாழும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.” என்று பேசியுள்ளார்.

அதாவது இவரது கூற்றுப்படி, செல்ஃபோன் கையில் வைத்து விமர்சனங்கள் பதிவிடுவது குறித்து பேசியது வரை ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றுதான். ஏனெனில், இந்த விமர்சனங்களால் எவ்வளவோ நல்ல படங்களை நாம் மிஸ் செய்தது உண்டு.

இதையும் படியுங்கள்:
கூட்டமாக இறந்து கிடந்த காகங்கள்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
M.S.baskar

ஆனால், எம்.எஸ்.பாஸ்கர் கூறிய 120, 200 ரூபாயில் மாட மாளிகைகள், கோபுரங்கள் கட்டிவிடப் போவதில்லை என்ற வார்த்தைகள்தான் யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“அதை சம்பாதிப்பது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அடுத்த படத்தில் அதனை எப்படி சரி செய்வது என்று பாருங்கள்.” என நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com