Crow
Crow

கூட்டமாக இறந்து கிடந்த காகங்கள்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Published on

கேரளா மாநிலத்தில் ஒரு இடத்தில் கூட்டம் கூட்டமாக காகங்கள் இறந்துக்கிடந்துள்ளன. இதனையடுத்து மருத்துவர்கள் மாதிரிகளை சோதித்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிகம் பறவை காய்ச்சல் ஏற்படுகிறது என்று சொல்லப்பட்டுகிறது. மக்களை அச்சுறுத்தும் இந்த காய்ச்சல், கேரளாவில் வாத்து, கோழி போன்றவற்றின் மூலம் ஏற்படுகிறது. ஆகையால், அந்தப் பறவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், இதுவரை 1 லட்சம் கோழி, வாத்து ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன. இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களை தாக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 59 வயது நபர் மெக்சிகோ நாட்டில் பறவைக் காய்ச்சல் தாக்கி இறந்ததாக உலகசுகாதார அமைப்பு தெரிவித்தது.

இதனையடுத்து கேரளாவில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.  அதேபோல், பறவை காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு கால்நடை மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் விலங்கு நோய்களுக்கான மாநில நிறுவனம் மற்றும் பறவை நோய் கண்டறியும் ஆய்வகத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டம் முகம்மா கிராமத்தில் சில நாட்களுக்கு முன்னாள், கூட்டம் கூட்டமாக காகங்கள் இறந்து கிடந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆய்வாளர்கள், காகங்களின் மாதிரிகளை எடுத்து வந்து சோதனை செய்து பார்த்தனர். காகங்களின் உடல் மாதிரியை பரிசோதனைக்காக போபாலுக்கும் அனுப்பினர். இதனையடுத்து காகங்களுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால், முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆலப்புழா மாவட்டத்தின் தென் பகுதிகளில் வாத்துகளுக்கு மட்டுமே பரவி வந்த பறவைக் காய்ச்சல், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு கோழி, காகங்களுக்கு பரவி இருப்பதாகவும், மாவட்டத்தின் வடக்கு பகுதிகளுக்கும் இது பரவி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குவைத் தீ விபத்து! இறந்தவர்களின் உடல்கள் இன்று சொந்த ஊர் செல்லும் நிலையில் தொழிலதிபர்கள் நிதி உதவி!
Crow

இது குறித்து மாவட்ட மருத்துவ அலுவலர் ஜமுனா வர்கீஸ் கூறுகையில், “பறவைக் காய்ச்சலின் தோற்றம் தற்போது வரை தெரியவில்லை. இது புலம்பெயர்ந்த பறவைகளால் வருகிறதா? அல்லது பிற மாநிலங்களில் இருந்து இங்கு வந்த பறவைகளால் வந்ததா? என்று தெரியவில்லை. இருப்பினும் இது மனிதர்களுக்கு பரவவில்லை. மக்கள் கட்டாயம் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com