GOAT படத்திற்கு ஆட்டுடன் வந்த கூல் சுரேஷ்… என்னங்க இதலாம்!

Cool Suresh With Goat
Cool Suresh With Goat
Published on

நடிகர் விஜய் நடிப்பில் இன்று The Goat படம் வெளியானது. இந்தநிலையில் இந்த படத்தைப் பார்க்க வந்த கூல் சுரேஷ் கையில் ஆட்டுடன் வந்தது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் The Goat படம் உருவானது. விஜயின் 68வது படமான இப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் தனது குடும்பத்துடனும், படக்குழுவினருடனும் முதல் காட்சியைப் பார்த்தார். த்ரிஷா, சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்களும் படத்தைப் பார்க்க வந்தனர். இதனையடுத்து ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் விஜய் நடிப்பும் அட்டகாசமாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்களே பாராட்டி வருகின்றனர்.

படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1100 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆகியுள்ளது. கேரளா ரசிகர்களும் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை தமிழ் சினிமா உலகில் இல்லாத அளவிற்கு இருக்கும் என்று மட்டும் நிச்சயமாக கூறப்படுகிறது.

இதில் ஒரே வருத்தம்தான். காலை 9 மணிக்கே முதல் ஷோ திரையிடப்பட வேண்டும் என்று தமிழக அரசு கூறிவிட்டது. இதுவே 4 மணிக்கு திரையிடப்பட்டிருந்தால், இதைவிட அதிக வசூலாகியிருக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், நகைச்சுவை நடிகர் மற்றும் பிக்பாஸ் பிரபலம் கூல் சுரேஷ் செய்த செயல்தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இவர் எப்போதும் புது படங்களைப் பார்க்க வரும்போது, படத்தில் வரும் கதாபாத்திரங்களின் கெட்டப்பில் வருவது அல்லது படத்தைக் குறிக்கும் எதோ ஒன்றை கையோடு எடுத்து வருவது என அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார். அதனால், இவருக்கு யூட்யூப் சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ‘தி கோட்’ - விஜய்யின் மாஸ் வில்லத்தனம்!
Cool Suresh With Goat

இதனையடுத்து தற்போது The Goat படத்திற்கு கூல் சுரேஷ் ஆட்டுடன் வந்திருக்கிறார். அந்த ஆட்டினை பந்தையத்திற்கு விடுவதைப் போலவும் சைகை காட்டினார். ஆட்டைத் தனது தோலில் வைத்துக்கொண்டு ‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா’ என்ற பாட்டையும் பாடினார். இதுகுறித்து அவர் பேசியபோது, “Goat படம்ல அதான் ஆட்டுடன் வந்தேன் என்று கூறிவிட்டு, "கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலெல்லாம் 4 மணி ஷோ இருந்தது. தமிழகத்தில் மட்டும் ஏன் அதிகாலை ஷோவிற்கு அனுமதி வழங்கவில்லை.” என்று காட்டமாக பேசினார்.

இவரின் கேள்வியும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதால், இவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com