'கூலி' OTT ரிலீஸ்! ரசிகர்கள் செஞ்ச வேலைய பாருங்க... தியேட்டர்ல கிடைக்காத ரிலாக்ஸ் இனிமே வீட்லதான்!

Coolie OTT release
Coolie OTT release
Published on

கூலி OTT வெளியீடு எப்போது? (When will the Coolie OTT release happen):

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரான ‘கூலி’ திரைப்படம் கடந்த மாதம் ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இது ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 171 வது படம் ஆகும். அதிரடித் திரைப்படமான கூலி ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிய நிலையில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட்டது.

கூலி OTT வெளியீட்டை எங்கே பார்ப்பது? (Where to watch Coolie OTT release?):

கூலி திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் செப்டம்பர் 11ஆம் தேதியான இன்று அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்தப் படம் OTTயில் ரிலீஸ் ஆகிறது.

அமேசான் பிரைம் தளத்தின் சந்தாதாரர்கள் இந்த படத்தை OTTயில் கண்டு ரசிக்கலாம். இந்தத் திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பு படம் வெளியான 8 வாரங்கள் கழித்து OTT யில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று OTT யில் ஹிந்தி பதிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

கூலி OTT வெளியீட்டு உரிமைகள் (Coolie OTT release rights):

அமேசான் பிரைம் வீடியோ கூலி படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை 120 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது. இதுவரை எந்தத் தமிழ் படத்திற்கும் இத்தனை பெரிய தொகை கொடுத்து வாங்கப்படவில்லை. மிகப்பெரிய ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று என தெரிகிறது. இதில் அனைத்து தென்னிந்திய மொழி பதிப்புகளுக்கான பிரீமியரும் அடங்கும்.

கூலி OTT வெளியீட்டிற்கான எதிர்பார்ப்புகள் (Expectations for the Coolie OTT release):

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் உள்ளனர். திரையரங்குகளில் படத்தைப் பார்க்காமல் தவற விட்டவர்களுக்கு OTTயில் பார்ப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினிகாந்த் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் ரஜினிகாந்த் கதாநாயகன் நடித்துள்ளார். நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி, சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களால் நிரம்பிய இந்த திரைப்படம் OTTயில் ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: கூலி - வசூல் சரி... எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?
Coolie OTT release

கூலி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உலக அளவில் 514 கோடி என தெரிகிறது. சமூக ஊடகங்களில் இந்த படத்திற்கான விளம்பர வீடியோக்கள் மற்றும் போஸ்டர்கள் போன்றவை ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருவதால் பரபரப்பு அதிகமாக உள்ளது இந்தி வெளியீடு தாமதமாவது குறித்து சில ரசிகர்கள் ஏமாற்றத்தை தெரிவித்தனர்

 இந்தத் திரைப்படம் 2025 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாகவும் இந்த ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com