'கொரோனா குமார்' படத்தின் பெயரும் கதாநாயகனும் மாற்றம்!

Director Gokul and vishnu vishal
Director Gokul and vishnu vishal

முன்னதாக கோகுல் இயக்கவுள்ள 'கொரோனா குமார்' படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது கொரோனா குமார் படத்தின் பெயரும் கதாநாயகனும் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

இயக்குனர் கோகுல் இதற்கு முன்னர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, சிங்கப்பூர் சலூன் போன்றப் படங்களை இயக்கினார். இவர் தற்போது அடுத்தப் படத்திற்கான ப்ரி ப்ரொடக்ஸன் வேலைகளை செய்து வருகிறார். அதாவது இயக்குனர் கோகுல் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா குமார் படத்தின் செய்திகளை வெளியிட்டார். மேலும் அந்தப் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல் வந்தது. ஆனால் சிங்கப்பூர் சலூன் படத்திற்கு பிறகு தற்போதுதான் கொரோனா குமார் படத்தை எடுக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதனிடையே சிம்புவிற்கும் கொரோனா குமார் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் இடையே சிறிய பிரச்சனை எழுந்ததால் சிம்பு படத்திலிருந்து விலகியதாக சினிமா வட்டாரத்தினர் கூறினார்கள். அதன்பின்னர் கொரோனா குமார் படத்தின் கதையை விஷ்ணு விஷாலிடம் கூறியுள்ளனர். அவருக்கு கதைப் பிடித்துப்போனதால் படத்திற்கு ஓகே கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் கொரோனா குமார் என்ற பெயரை வைப் குமார் என்று படக்குழு மாற்றியுள்ளது. ஏனெனில் படத்தின் ஸ்க்ரிப்ட்டில் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் 2 மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வைப் குமார் படத்தின் ஹீரோயினும் கிட்டத்தட்ட உறுதி. இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இவர் தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து வைப் குமார் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஆடு ஜீவிதம் - ஆடு மேய்ப்பவனின் அவதிகளை பிரதிபலிக்கும் ஆழ்ந்த அனுபவம்!
Director Gokul and vishnu vishal

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படத்திற்குப் பிறகு இப்படம் அவருக்குக் கைக்கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இயக்குனர் கோகுல் எடுத்தப் படங்களில் சில வெற்றி படங்கள் மட்டுமே உள்ளதால் கதையைப் பொறுத்துதான் இப்படத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால், அதிதி மற்றும் இயக்குனர் கோகுலுக்கு கம்பேக்காக அமையுமா என்பதுத் தெரியவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com