கிரிப்டோகரன்ஸி விவகாரத்தில் தமன்னா மற்றும் காஜல் பெயரைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபக்காலமாக கிரிப்டோகரன்ஸி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். இவற்றில், ஆரம்பத்தில் சிலருக்கு லாபம் கொடுத்து, பின்னர் மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு மோசடி செய்பவர்களும் உள்ளனர்.
அதேபோல், போலி தளங்கள் உருவாக்கப்படுகின்றன. அதில் முதலீடு செய்யும் போது, உங்கள் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல்தான் தற்போது கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுங்கள் பல மடங்கு லாபத்தை தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி புதுச்சேரியைச் சேர்ந்த 10 நபர்களிடம் 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்தனர். அந்த பணத்தை எடுக்க முடியாமலும் போட்ட பணம் கூட கிடைக்க முடியாமல் கிரிப்டோ கரன்சியாக கூட வாங்க முடியாமல் பணத்தை நஷ்ட படுத்தி விட்டார்கள். என்று புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் ஊழியர் அசோகன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் திவிர விசாரணை செய்தனர். இதற்கு பின்னால் உள்ள மோசடி கும்பல் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் தெரிந்தது, இந்த கும்பல் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தியுள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன் நடிகை காஜல் அகர்வாலை வைத்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் 100 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் இருக்கின்ற கார்களை அவர்கள் முதலீடு செய்ததற்கு ஏற்ப பரிசாக வழங்கியுள்ளனர்.
இதேபோல், டெல்லியிலும் ஒரு விழா நடத்தி பொதுமக்களிடமிருந்து நிதியை திரட்டியது தெரியவந்தது .
ஆனால், இந்த விவகாரத்தில் எந்த ஆப்களும் பயன்படுத்தவில்லை, நேரடியாகவே பணத்தை வாங்கியிருக்கிறார்கள்.
ஆனால், இந்த விவகாரத்தில் சினிமா நடிகைகளை நேரடியாக பயன்படுத்திருக்க வாய்ப்பில்லை என்று போலீஸார் கூறுகின்றனரே தவிர, இதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உண்மை.