தனுஷுடன் இணையும் மெகா ஸ்டார்; 'D 55' படத்தின் மாஸ் அப்டேட்!

dhanush
dhanush
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

கோலிவுட் , பாலிவுட் , ஹாலிவுட் ஆகிய மூன்று திரை உலகங்களிலும் கால் பதித்த , நடிகர் தனுஷின் 55 வது திரைப்படம் கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பி உள்ளது. தமிழில் தனுஷ் நடித்த கடைசி திரைப்படமான  'இட்லிகடை' கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே நேரம் தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான "தேரே இஷ்க் மெயின்" பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுள்ளது. தனுஷின் பெயரிடப்படாத  'D 55' திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் ,  இறுதியாக அவர் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து அமரன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். 

இந்த திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமான வசூலைக் குறித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இருவரும் இறுதியாக பெரிய வெற்ற பெற்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளதால் , அவர்கள் இணையும் இந்த திரைப்படமும் பெரிய வெற்றியை பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பான் இந்தியா திரைப்படமாக வெளியிடப்பட உள்ளது. இந்த திரைப்படம் சமூகத்தில் ஊடுருவியுள்ள, தேசப்பற்றும் சமூகப்பற்றும் கொண்ட அடையாளம் தெரியாத நாயகர்களை பற்றிய கதை, என்று ராஜ்குமார் பெரியசாமி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் தமிழ் சினிமாவில் மம்முட்டி:

இந்த படத்தின் மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி , ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பது, கோலிவுட்டின் ஹாட் ஸ்டோரிகளில் ஒன்றாக உள்ளது. நடிகர் மம்முட்டி தமிழ் திரையுலகிலும் நிறைய திரைப்படங்கள் நடித்து, பல வெற்றித் திரைப்படங்களிலும் கொடுத்துள்ளார். சுமார் 7 வருடங்களுக்கு பிறகு மம்மூட்டி மீண்டும் ஒரு நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். இதற்கு முன்னர் கம்மத் & கம்மத் என்ற திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஒரு காட்சியில் மம்முட்டி தோன்றியிருந்தார்.  இதன் பின்னர் 13 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து திரையில் தோன்ற உள்ளனர். அநேகமாக தனுஷிற்கு அப்பா கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிப்பார் என்று பேசப்படுகிறது.

சாய்பல்லவி மற்றும் ஶ்ரீ லீலா :

இந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்க , நாயகிகளாக சாய் பல்லவியும் , ஶ்ரீ லீலாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். முதல் முறையாக ஶ்ரீ லீலா தனுஷுடன் இணைந்து நடிப்பது அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாய் பல்லவி இதற்கு முன்னர்  'மாரி 2'  திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். சாய் பல்லவியும் ஸ்ரீ லீலாவும் நன்றாக நடனம் ஆடக் கூடியவர்கள் என்பதால், இந்த திரைப்படத்தில் நடனத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாடல்கள் இருக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க சாய் அபியங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் முதன்முறையாக தனுஷ் நடிக்கும்  திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் திரைக்கதையை ராஜ்குமார் பழனிச்சாமியுடன், விக்னேஷ் ராஜா மற்றும் ஆல்பிரட் பிரகாஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கி வருகின்றனர். மற்ற தொழில் நுட்ப கலைஞர்களாக தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராகவும் , ஸ்ரீஜித் சாரங் எடிட்டராகவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்தத் திரைப்படத்தை ஆர்டேக் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து , தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு அதிகாரப் பூர்வமாக அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: VALATHU VASHATHE KALLAN (2026) - மலையாளம் - க்ரைம் திரில்லர்!
dhanush
logo
Kalki Online
kalkionline.com