Valathu Vashathe Kallan
Valathu Vashathe Kallan

விமர்சனம்: VALATHU VASHATHE KALLAN (2026) - மலையாளம் - க்ரைம் திரில்லர்!

Published on
ரேட்டிங்(3 / 5)

திரிஷ்யம் (பாபநாசம்) படத்தின் மெகா ஹிட்டுக்குப்பின் அதன் இயக்குனர் ஜீத்து ஜோசப்க்கு ஒரு பிராண்ட் வேல்யூ உருவாகி விட்டது. அவர் படத்தில் வரும் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்க்காக கை தட்டும் ஒரு ஆடியன்ஸ் க்ரூப் உருவாகி விட்டது. அப்படிப்பட்ட இயக்குனர் இயக்கத்தில் லேட்டஸ்ட் ஆக 30/1/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் தான் 'வலது வசத்தே கள்ளன்' - Valathu Vashathe Kallan (நம் அருகிலேயே திருடன்). கேரளாவில் மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் ரிலீஸ் ஆகி இருக்கும் இந்தப்படம் ஆங்கில சப் டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது.

ஸ்பாய்லர் அலெர்ட்

வில்லன் ஒரு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டர். இவர் ஊழல் கறை படிந்தவர். பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் ஸ்டேசனில் வந்து புகார் கொடுக்கும்போது குற்றம் செய்தவர் செல்வாக்கு மிக்கவர் ஆக இருந்தால் அவரிடம் லஞ்சம் பெற்று அவரைக் காப்பாற்றி விடுபவர்.

வில்லனுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் அப்பா பேச்சைக்கேட்காமல், அப்பாவை மதிக்காமல் வளர்பவன். வில்லனின் மனைவி குழந்தையைப் பிரசவித்தவுடன் இறந்து விடுவதால் ஒரு வித வெறுப்புடன் தான் வில்லன் தன் மகனை வளர்க்கிறான்.

நாயகன் தன் மனைவி, மகள் உடன் ஒரு சந்தோஷமான வாழ்க்கை நடத்தி வருகிறான். நாயகனின் மகள் காணாமல் போக, அது பற்றி புகார் தர நாயகன் போலீஸ் ஸ்டேஷன் வருகிறான். அங்கே வில்லனைப் பார்க்கிறான். தன் மகள் காணாமல் போனதற்கு வில்லன் எதோ ஒரு வகையில் காரணம் என்பதை நாயகன் கண்டு பிடிக்கிறான்.

வில்லனின் மகனைக் கடத்தி ஒரு இடத்தில் அடைத்து விட்டு வில்லனுக்கு ஒரு வீடியோ அனுப்புகிறான். அதில் நீ இதுவரை செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு சரண்டர் ஆகிவிட்டால் உன் மகனை உயிருடன் பார்க்க முடியும் என தகவல் அனுப்பி விட்டு நாயகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறான்.

இதற்குப்பின் வில்லன் தன் மகனை உயிருடன் மீட்டானா? என்பது மீதி திரைக்கதை.

வில்லன் ஆக பிஜூ மேனன் படம் முழுக்க ஃபிரேம் பை ஃபிரேம் தன் வில்லத்தன நடிப்பால் நம் மனதை ஆக்ரமிக்கிறார். மகனிடம் அவர் வைத்திருக்கும் பாசம், அவன் அடங்காமல் இருப்பது எல்லாம் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கிறது.

நாயகன் ஆக ஜோஜூ ஜார்ஜ் கெஸ்ட் ரோலில் வருகிறார். சிறிது நேரமே வந்தாலும் நம் மனதில் தங்கி விடுகிறார். நாயகனின் மனைவி ஆக லீனா கச்சிதம். மற்ற அனைத்துக் கேரக்டர்களும் கச்சிதமாக நடித்து இருக்கிறார்கள்.

விஷ்ணு ஷியாமின் இசை கனகச்சிதம். குறிப்பாக பின்னணி இசையில் டெம்ப்போ ஏற்றுகிறார். சதீஷ் குருப்பின் ஒளிப்பதிவு அருமை. வி எஸ் விநாயக்கின் எடிட்டிங்கில் படம் 135 நிமிடங்கள் ஓடுகிறது. இடைவேளைக்குப் பின் வரும் ஒரு மணி நேரம் ஸீட் எட்ஜ் திரில்லர் தான். கதை, திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் ஜீத்து ஜோசப்.

சபாஷ் டைரக்டர்

  • பிள்ளை வளர்ப்பு எப்படி இருக்கணும் என்ற நல்ல மெசேஜ் சொல்லப்பட்ட விதம்.

  • ஓப்பனிங்க் சீனில் போலீஸ் ஸ்டேசனில் பாதிக்கப்பட்ட மாணவி தன் அம்மாவுடன் புகார் கொடுக்க வர, வில்லன் பழியை அந்த மாணவி மீதே சுமத்தி கேஸை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பும் சீன் பரபரப்பு.

  • பொதுவாக பெண் குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். இதில் அந்த குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று பேரண்ட்டிங்க் பற்றி சொன்ன விதம் அருமை.

  • படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே ஒரு போலீஸ் ஸ்டேசனில் நடப்பதாக சொல்லப்பட்டு இருப்பதால் 'லோ பட்ஜெட்' படம் இது.

  • கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதிகாரிக்கு ஒரு பிரச்னை என்றதும் எப்படி சக போலீஸ் ஆபீசர்ஸ் ஒத்துழைப்பு தருகிறார்கள் எனக்காட்டிய விதம்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: சர்வம் மாயா (2025) - 'சூப்பர் நேச்சுரல்' ரொமாண்டிக் காமெடி ட்ராமா..!
Valathu Vashathe Kallan

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • நாயகன் விஷம் குடித்து விட்டதாக சொன்னதும், வில்லன் உடனே அவனை ஆஸ்பிடலில் அட்மிட் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வில்லனின் மகனை நாயகன் அடைத்து வைத்த இடம் நாயகனுக்கு மட்டுமே தெரியும். அப்படி இருக்க நாயகனை சாக விடலாமா? போலீஸ் ஸ்டேசனில் அத்தனை போலீஸ் இருந்தும் யாரும் ஆம்புலன்சுக்கு போன் செய்ய முயற்சிக்க வில்லை. இது ஏன்?

  • வில்லனின் மகன் ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டு அவனிடம் ஒரு பேசிக் மாடல் செல்போன் இருப்பது எல்லாம் 2010ம் ஆண்டில் வெளிவந்த பரீடு (BURRIED) ஹாலிவுட் படத்தில் இருந்து எடுத்திருக்கிறார்கள்.

  • கதையில் பாதிக்கப்பட்ட நல்லவர்கள் எல்லாரும் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது நெகடிவ் எனர்ஜியைப் பரப்புவது போல் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: மெல்லிசை; லாக்டவுன்; கருப்பு பல்சர் - மூணுமே சுமார் ரகம்!
Valathu Vashathe Kallan
  • வில்லனின் மகன் உயிருக்கு ஆபத்து, அவனை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள்? என்பது தான் பின் பாதி திரைக்கதையின் விறுவிறுப்பு. ஆனால் வில்லனும் கெட்டவன், வில்லனின் மகனும் கெட்டவன் என்பதால் நமக்கு அதில் ஆர்வம் இல்லை.

  • க்ளைமாக்சில் போன் நெம்பர்ஸை வைத்து வில்லன் கண்டு பிடிக்கும் ஒரு விஷயம் 2001-ல் வெளிவந்த எ பியூட்டிபுல் மைண்ட் (A BEAUTIFUL MIND) படத்தில் இருந்து இன்ஸ்பயர் ஆகி இருக்கிறார்கள்.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+ குடும்பத்துடன் பார்க்கலாம்.

சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - திரிஷ்யம் லெவலுக்குப் பிரமாதமான படம் எல்லாம் இல்லை என்றாலும், டீசண்ட் ஆன ஒரு க்ரைம் திரில்லர் என்ற அளவில் பார்க்க வேண்டிய படம் தான் இது.

logo
Kalki Online
kalkionline.com